பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

93


நீ அவற் கண்ட பின்றைப், பூவின் -

ஆடுவண்டு இமிராத் தாமரை 20

சூடாய் ஆதல் அதனினும் இலையே!

பாணனே! “யாழ் கையிலே, பசி வயிற்றிலே, தைத்த பழங்கந்தை இடுப்பிலே, பெரிய சுற்றத்துடனே உலகெல்லாம் சுற்றி வந்தோம்; வறுமை தீர்ப்பவர் யார்?" எனக் கேட்கின்றாய். பகைவர் யானையையுங் கொன்று வீழ்த்தும் படை மறவரை உடையவன்; உயர்நிலை மாடத்து உறையூரில் உள்ளவன், பகைவர்பாற் சினந்து எரியொளிர்வேல் தாங்கிச் செல்பவன்; அக் கிள்ளியினிடம் செல்வாயாக. அவனைக் காணக் காலமும் பார்க்க வேண்டிய தில்லை. பகல் வேளையிலே வரும் பரிசிலர்க்குத் தேரினை வழங்கிக் கொண்டே இருக்கும் அவனைக் கண்டபின், நீ பொற்றாமரைப் பூச்சூடி மகிழும் பேறு உறுதியாகப் பெறுவாய்..ஆகலின், இன்னே அவன்பாற் செல்வாயாக!

சொற்பொருள்: 1. கடன் - இலக்கண முறைமை. 3. வேற்றிழை நுழைதலாவது, கிழிந்த துணிகள் பலவிடத்துந் தைத்த நூலிழை. வேர்நனை - வியர்வையால் நனைந்த, 4. உயவல் - வருத்தம்.9. உயவும் - புண்பட்டு வருந்தும்.11. கலாஅம் - போர் ஆரவாரம்.12. பொருநர் - ஈண்டுப் போர் செய்வோர். 14 தகைத்தார் . சுற்றப் பட்ட மாலை. 17. நிற்றல் - காலம் பார்த்து நிற்றல். 19. இமிரா - ஊதாத

70. குளிர்நீரும் குறையாத சோறும்!

பாடியவர்: கோவூர் கிழார்; (கோவூர் அழகியார் எனவும் பாடம்). பாடப்பட்டோன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை

(கிள்ளி வளவனின் நல்லிசை யுள்ளிச் செல்வையாயின் பெறுகுவை என்று உரைத்தலால், பாணாற்றுப்படை ஆயிற்று. 'அவனது தாள் வாழ்க’ என வாழ்த்தியதும் ஆம்)

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண, 'கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி, வினவல் ஆனா முதுவாய் இரவல! 5 தைஇத் திங்கள் தண்கயம் போலக், கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்; அடுதீ அல்லது சுடுதீ அறியாது! இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்; கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி, 1O