பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

99


- 75. அரச பாரம்!

பாடியவர்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி.

(தெளிந்த பொருளைக் கூறினன்; அதனால் பொருண் மொழிக் காஞ்சி ஆயிற்று பொதுமொழிக் காஞ்சி எனவும் பாடம்) - 'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,

பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு எனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! 5

மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றுழ் வாடுவறல் போல, நன்றும் நொய்தால் அம்ம தானே - மையற்று 10

விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே.

மூத்தோர் காலன்வாய்ப்பட, அரசுரிமையை ஏற்றுக் குடிகளைக் காப்பது அவரவர் மன இயல்பால் இருவகைப்படும். குடிகளிடம் வரிவேண்டி இரக்கும் சிறுமை உடையவனுக்கு அது பெரும் பாரமாக விளங்கும். போராற்றலும் சால்பும் உடைய வனுக்குக் கிடேச்சி தக்கையைப் போலச் சுமப்பதற்கு மிகவும் இலேசாகத் தோன்றும்.

சொற்பொருள்: 2. பால் - விதி. 4. குடிபுரவு இரக்கும் - தம் குடிமக்களை இறைவேண்டி இரக்கும். 5. சிறந்தன்று - அத் தாயம் அவனுக்குச் சுமக்க வொண்ணாதாம்படி கனத்தது.மதன் வலிமை. 6. நோன்றாள் வலிய முயற்சி.8 கிடை-நெட்டி இதனைத் தக்கைப் பூண்டு எனவும் கூறுவர்.9 என்றுழ் - கோடைக்கண். வறல் - கள்ளி. “மன் ஆக்கத்தின்கண் வந்தது. 'அம்ம - அசைநிலை.

76. அதுதான் புதுமை! பாடியவர்:இடைக்குன்றுர்கிழார்: பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன். திணை: வாகை. துறை: அரச வாகை, -

(அரசனது இயல்பையும் வெற்றியையும் கூறுதலால்

அரசவாகை ஆயிற்று. 'நூழில்’ என்னும் துறைக்கு எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர் (புறத் சூ. 14 உரை) -