பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

புறநானூறு - மூலமும் உரையும்



ஒருவனை ஒருவர் அடுதலும், தொலைதலும் புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்

நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, 5

செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி, ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப் பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக, நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன், பீடும் செம்மலும் அறியார் கூடிப், 10

'பொருதும் என்று தலை தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க, ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!

ஒருவனை ஒருவன் கொல்லுதலும் ஒருவனுக்கு ஒருவன் தோற்றலும், இந்த உலகத்திலே புதுமையன்று. ஆனால் நெடுஞ்செழியனின் வலிமையை அறியாதவராகத் தாம் ஒன்றாகக் கூடி, இருபெரு வேந்தரும் ஐம்பெரும் வேளிரும் போரிட்டு நின்றனர். அவர்களைத் தான் ஒருவனாகவே நின்று போரிட்டுக கொல்லுதலைச் செய்தானே நெடுஞ்செழியன்; அதுதான் புதுமை!

சொற்பொருள்: 3. திரள் அரை - அடிப்பகுதி பருத்துத் திரண்ட 5. பவர் கொடி. 7. ஒலியல் மாலை - வளையல் மாலை. 10. செம்மலும் - தலைமையையும்.

77. யார்? அவன் வாழ்க !

பாடியவர்: இடைக்குன்றுர் கிழார் பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: அரச வாகை -

(செழியனது இயல்பையும் வெற்றியையும் கூறுதலால் அரசவாகை ஆயிற்று. செழியன் களத்தில் போரிட்ட நிலையை ஒவியமாக்கிக் காட்டுகின்றார் புலவர். உழிஞைத் திணைத் துறைகளுள், 'திறற்பட ஒருவன் மண்டிய குறுமைக்கு எடுத்துக் காட்டுவர் இளம்பூரணனார் (புறத்சூ15.உரை) கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக், குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் 5