பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vị

நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்!

- - மோசி கீரனார் எவ்வழி நல்லவர் ஆடவர்; அவ்வழி நல்லை வாழிய நிலனே!

- - ஒளவையாா மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே! - - அறிவுடை நம்பி உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே!

- - -நக்கீரர் எலிமுயன் றனைய ராகி உள்ளதம் வளன்வலி யுறுக்கும் உளம்இலாள ரோடு இயைந்த கேண்மை இல்லா கியரோ!

- நல்லுருத்திரன் யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா!

பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

- கணியன் பூங்குன்றனார் நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்பு மின் -

-நரிவெரூஉத் தலையார் என்றும் சான்றோர் சான்றோர் பாலர் الارویے; சாலார் சாலார் பாலர் ஆகுபவே!

s - 36′soford;607/sss ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே!

- - சேரமான் மாக்கோதை

பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!

- பெருங்கோப் பெண்டு