பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

புறநானூறு - மூலமும் உரையும்


("போர் எதிர்ந்து களம்புகல் ஒம்புமின்’ எனவுரைத்து, அதியனின் தானைமறச் செவ்வியை உரைத்தனர். வாகைத் திணையுள், ‘அரும்பகை தாங்கும் ஆற்றல்’ என்பதற்கு எடுத்துக் காட்டுவர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும்)

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே!

பகைவர்களே! போர்க்களம் சேர்வதைப் போற்றுங்கள். எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவன் எம்முள்ளும் ஒருவன் இருக்கின்றான். ஒரு நாளைக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன், ஒரு மாதங் கூடிச் செய்த தேர்க்காலைப் போன்ற அழகும் வலிமையு முடையவன் அவன்!

சொற்பொருள்: 1. களம் - போர்க்களம். ஒம்புமின் - போற்றுமின். 4 திங்கள் வலித்த ஒரு மாதமாகச் செய்யப்பட்ட கால் அன்னோன் - தேர்க்காலின் வலிமையும் அழகும் ஒப்பவன்! திண்மையும் அழகும் தோள்களுக்கு உவமையாயின.

88. எவருஞ் சொல்லாதீர்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: தும்பை. துறை: தானைமறம்.

(அதியனின் தானைமற மேம்பாட்டை வியந்து உரைக் கின்றனர். ‘காணாவூங்கு யாம் பொருதும் என்றல் ஒம்புமின்; காணின் அது கூறில், நீவிர் அழிவது உறும் என்று கூறியதாம்)

யாவிர் ஆயினும், கூழை தார் கொண்டு யாம்பொருதும் என்றல் ஓம்புமின், ஓங்குதிறல் ஒளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமக்கள், கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின் விழவுமேம்பட்ட நற்போர் - 5 முழவுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.

நீர் எப்படிப்பட்டவராயினும், "அவனோடு போரிடுவோம்’ என்று மட்டும் சொல்லாதீர். உயர்ந்த வலிமையுடையவன்; வேல் உடைய படை மறவர்க்குத் தலைவன்; பூணணிந்த பரந்த மார்பினன், களவேள்வி ஆற்றிச் சிறந்த நல்ல போரைச் செய்யும் முழவுபோன்ற தோளினை உடையவன்; அவன் எம் இறைவன்! அவனைக் காண்பதற்குமுன் சொன்னது சரி, கண்டபிறகும் அவ்வாறு சொன்னால், சொல்லியபடி செய்தல் அரிதாதலை அறிந்திருப்பீர்; ஆதலால் சொல்லாதீர். t