பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

109


சொற்பொருள்: 1.கூழை-பின்னணிப்படை3.ஒளிரு-பாடஞ் செய்யும்; ஒளிவிடும். - .

89. என்னையும் உளனே!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: தும்பை. துறை: தானைமறம்.

('எறிகோல் அஞ்சா அரவின் அன்ன சிறுவன் மள்ளரும் உளரே எனவும், 'உமை வளிபொரு தெண்கண் கேட்பின், அது போர் என்னும் என் ஐயும் உளனே' எனவும், தானை மறம் கூறினார்)

'இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டல்குல், மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி! பொருநரும் உளரோ, நும்அகன்றலை நாட்டு? என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! எறிகோல்அஞ்சா அரவின் அன்ன 5

சிறுவன் மள்ளரும் உளரே, அதாஅன்று பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின், அது போர் என்னும் என்னையும் உளனே

'மடவரல் உண்கண் வாள்நுதல் வஞ்சியே, உன் பெரிய நாட்டிலே என்னோடும் போரிடுவார் உளரோ?’ என, என்னைக் கேட்ட படைபலம் உடைய வேந்தனே! கேள்: 'எம் நாட்டிலே அடிக்குங் கோலுக்கு எதிரே சீறி எழும் பாம்பு போன்ற வலிமையுடைய படைமறவர் கணக்கற்றோர் உளர். அவர்கள் மட்டுமன்று முழவிலே காற்று மோத, அதனால் எழுந்த ஒசையையே போர்ப் பறையொன்று மகிழ்ந்து எழும் எம் தலைவனும் உளன்! இவை கண்டுமோ நீ கேட்கின்றாய்? (பகைவரை நோக்கிக் கேட்கிறார் புலவர்)

. சொற்பொருள்: 1.இழை அணி - மணிக்கோவையாகிய அணி

3. பொருநரும் - என்னோடு பொருபவரும், 4. வினவல் ஆனா - கேட்டல் அமையாத 5 எறிகோல் அடிக்குங் கோல். 6 மள்ளர் - வீரர். அதா அன்று அதுவேயுமின்று. 7. பொதுவில் மன்றில் 8. வளி - காற்று.9. என் ஐ எனது தலைவன். தெண்கண் - ஒசையை.

90. புலியும் மானினமும்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: தும்பை. துறை: தானைமறம்.