பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

புறநானூறு - மூலமும் உரையும்



உண்டாயின் பதம் கொடுத்து,

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்,

அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.

இவைதாம் பீலி அணிந்து, மாலை சூட்டி, அழகுடன் நெய் பூசப்பட்டுக், காவலையுடைய நின் அரண்மனையிலே அழகிதாக உள்ளன. உண்டானால் உணவளித்தும், இல்லையானால் உள்ளதைப் பகிர்ந்தளித்தும் மகிழும் வறியோர் தலைவனாகிய எம் வேந்தன் அஞ்சியின் வேல்களோ, பகைவரைக் குத்துதலால் நுனி முரிந்தனவாகக், கொல்லன் உலைக்களத்திலே யன்றோ சிதைவுற்றுக் கிடக்கின்றன!

சொற்பொருள்: 1. இவ்வே - இவைதாம். 2. கண்திரள் - உடலிடம் திரண்ட காழ் - காம்பு. அவ்வே - அவைதாம். 5. கொல்துறை - கொல்லனது பணிக்களரியாகிய இடம். 5. பதம் - உணவு. ‘சிதைந்து கொல்துறை குற்றில’ என்பது பழித்தது போலப் புகழ்ந்து கூறப்பட்டது.

96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி. திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(அரசனது இன்பச்சிறப்பும், வென்றிச் சிறப்பும் கூறினர். இவற்றால், அவனது இயல்பு கூறிப் பாராட்டுதலால் இயன் மொழி ஆயிற்று)

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின், திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே, பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே 5 'விழவு இன்று ஆயினும், படுபதம் பிழையாது, மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் கைமான் கொள்ளுமோ? என, உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

இளையோனாகிய இவன், எம் இறைவன் அஞ்சியின் மகன். இவனுக்கு இரண்டு பகைகள் உள. ஒன்று, இவனைக் கண்டு காதல் கொண்ட கன்னியர், தம் நெஞ்சம் வருந்தத் துயர் மிகுந்தாராவது; மற்றொன்று, விழாநாள் இன்றேனும், ஆட்டுக் கறியுடன் உண்டு மகிழ்ந்த சுற்றத்தோடு, நீர்த் துறையிலே போர்யானைகள் வந்து