பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

புறநானூறு - மூலமும் உரையும்



15. ஐயவி புகைப்பவும் - விழுப்புண் பட்டவரை வீட்டில்போட்டு வெண்சிறு கடுகைக் கூற்று வந்து தீண்டி உயிர் போக்காதபடி புகைப்பர்; இதனைக் குறித்தது இது. ஒய்யென விரைய. 11. உய்க்கும் - உயிரைக் கொண்டு போகும். புனற்படப்பை நீர்ப்பக்கத்தையுடைய கொல், ஒ; அசை நிலைகள்.

99. எய்தியும் அமையாய்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: வாகை. துறை: அரசவாகை.

('நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கு அரியை, திகிரி யேந்திய தோளை இன்றும் பரணன் பாடினன்கொல்’ என, அரசனது இயல்பின் மிகுதியைக் கூறினமையின் அரச வாகை ஆயிற்று)

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், நீர்அக இருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல, ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல், 5 பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல், எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம் வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு, இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச் சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய 10 அன்றும், பாடுநர்க்கு அரியை, இன்றும் பாணன் பாடினன் மற்கொல், மற்று நீ முரண்மிகு கோவலூர் நூறி, நின் அரண்அடுதிகிரி ஏந்திய தோளே!

நின் முன்னோரைப் போல வீரக்கழல் புனைந்த காலும், பனம் பூவாலாகிய தாரும், பூங்காவும், புதிய ஈரப் புலாலுடைய நெடிய வேலும், வழிபாடும், யாகமும், கரும்பை இவ்வுலகிற்குக், கொணர்ந்த செவ்வியும், ஏழிலாஞ்சனை நாடுதலை உடைய' அரசுரிமையும் பெற்றும் நீ அமைந்திராய். ஏழரசரோடும் பகைத்துப் போர்மேற் சென்றாய்; போரில் வென்றும் சிறந்தாய்! எனினும், பாடுவார்க்கு அரியனாகவே விளங்கினாய். இன்றும், நீ கோவலூரை அழித்த வெற்றியைப் பரணர் தம் பெருந்திறனாற் பாடினர் அன்றோ பெருமானே, நீ வாழ்க!