பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

121


பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. திணை:பாடாண். துறை: இயன்மொழி. - -

('அச்சு முறிந்த விடத்துச் சேமவச்சு உதவினாற் போல, நீ காக்கின்ற நாட்டிற்கு ஒர் இடையூறு உற்றால், அது நீக்கிக் காத்தற்கு உரியை" என்று அறிவுறுத்துகின்றார்) 'எருதே.இளைய நுகம் உண ராவே, சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே; அவல் இழியினும், மிசை ஏறினும், அவனது அறியுநர் யார்?' என, உமணர் கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன, 5

இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்

நாள்நிறை மதியத்து அனையை, இருள்

யாவண தோ, நின் நிழல்வாழ்வோர்க்கே!

‘எருதுகள் இளையன: நுகம் பூண்டதையும் மதியாது மூரிப்புடன் வண்டியை இழுத்துச் செல்வன, வண்டியோ பெரும்பாரம் ஏற்றப்பட்டுள்ளது; அதனால், 'வழியில் மேடு பள்ளங்களில் யாதோமோ எனச், சேமவச்சும் தம் வண்டியிற் கட்டிச் செல்பவர் உப்பு வணிகர். அவ் வச்சுப் போன்று, பிறர் வாழ்வு கவிழ்ந்து போகாமல் தாங்கிக் காத்து உதவுபவன் நீ. நின்னைச் சேர்ந்தவர்.பால் துன்பஇருள் நேர்ந்தால், அதனைப் போக்கும் வள்ளன்மையால் உலகிருளைப் போக்கும் நிலவுபோல் விளங்குபவனும் நீ!

சொற்பொருள்: 1. நுகம்; உணரா - நுகம்பூண்டலை அறியா. 3.அவல்-பள்ளம்மிசைஏறினும் மேட்டிலே ஏறினும்.4.அவனது அறியுநர் அவ்விடத்து வரும் இடையூறு அறிவார். உமணர்-உப்பு வாணிகர். 5. கீழ் மரத்து யாத்த கீழ்மரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட சேமஅச்சு - எதிர்பாரா வகையிலே அச்சு முறியின் அதற்குப் பிரதியாக உதவும் மற்றோர் அச்சு 6 கவிகை - இடக் கவிந்த கை. திங்கள் - திங்களாகிய, 8. யாவனது - எவ்விடத்தி லுள்ளது.

103. புரத்தல் வல்லன்!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான்

நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை