பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

புறநானூறு - மூலமும் உரையும்


விறலியே! சுனையிலே மலர்ந்த நீலமலரின் தேன், மழை பெய்யாத காலத்திலும் அருவியாக வழிந்து, கொள்ளிற்கு உழுத நிலத்தினூடே பாய்காலாக ஒடும். அதனினும், மலைச் சிகரங்கள் தோறும் வழியும் அருவி நீரினும், மிகவும் இனிய பண்பினன் எம் வேள் பாரி. அவனைப் பாடிச் சென்றால், சிவந்த பல சிறந்த அணிகலன்களைப் பரிசாக நீ பெறுவாய்.

சொற்பொருள்: 1. சேயிழை - சிவந்த அணி, 2. தடவுவாய் - பெரிய இடத்தையுடைய சுனையின்கண். கலித்த தழைத்த, மாஇதழ் கரிய இதழையுடைய.3. தண்சிதர் கலாவ-குளிர்ந்த துளி கலக்க. 6. மால்உடை - கண்ணேணியை உடைய கண்ணேணி யாவது கணுக்களிலேயே அடிவைத்து ஏறிச் செல்லும்படியாக அமைந்துள்ள மூங்கிலேணி. .

106. தெய்வமும் பாரியும்

. பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: பாடாண். துறை : இயன்மொழி.

('பாரி கைவண்மை செயலைக் கடப்பாடாக உடையவன்' என, அவனது இயல்பு கூறலின் இயன்மொழி ஆயிற்று)

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை கடவுள் பேணேம் என்னா; ஆங்கு மடவர் மெல்லியர் செல்லினும், கடவன், பாரி கை வண்மையே. . w 5

நல்லதாயினும் தீயதாயினும் அல்லாத, குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவாயினும், ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் அதனைத் தெய்வங்கள் விரும்பி ஏற்குமேயன்றி, ‘யாம் அவற்றை விரும்பேம்' என்று கூறா. அதுபோல, அறிவில்லாதாரும், புல்லிய குணத்தாரும் தாமறிந்தவரை பாடிப் புகழ்ந்து சென்றாலும், பாரி, அவர்க்கும் உவந்து வழங்குவதே தனது கடமை எனக் கருதும் பெருவண்மை உடையவனாவான்.

சொற்பொருள்: 1. குவிஇணர் - குவிந்த பூங்கொத்து. பேணேம் - விரும்பேம். உடையவை - ஒருவன் உடையவற்றை. 4. மடவர் - யாதும் அறிவில்லாதாரும்; மெல்லியர் - புல்லிய குணங்களை உடையாரும். 5. கைவண்மை கடவன் - கையால் வள்ளன்மை செய்தலைக் கடப்பாடாக உடையவன்.