பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

129


(பாரி ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும், வஞ்சித்துக் கொன்றமையின், வென்றெறி முரசின் வேந்த ரென்றது ஈண்டு இகழ்ச்சிக்குக் குறிப்பு என்று கொள்க)

113. பறம்பு கண்டு புலம்பல்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: பொதுவியல். துறை: கையறுநிலை. சிறப்பு: நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.

('பாரியின் சாவிற்கு நொந்தும், அவன் மகளிரைக் காக்கும்

பொறுப்பை எண்ணியும் கலங்கிக் கூறிய செய்யுள் இது. 'பாரி

மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டு போவான் பறம்பு விடுத்தபோது பாடியது எனவும் கூறுவர்)

மட்டுவாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்

பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,

நட்டனை மன்னோ, முன்னே; இனியே,

பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று. 5

நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்

சேறும்; வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே'

கோல் திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர் நாறுஇருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.

பறம்பே முன்னர் இருந்த நின் வளம் எத்தகையது? நின்னை நாடிவரும் இரவலர்க்கு, மதுவைத் தருவார் சிலர்; ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்து ஊனும் சோறும் வேண்டி வேண்டி அளிப்பார் சிலர். அத்தகைய வளத்துடன் முன்னர் நீ எமக்கு நட்புடைமையாக விளங்கினையன்றோ? ஐயகோ இன்றோ, பாரி வீழ்ந்தனன்! அவன் மக்களை மணக்க உரிய கணவரைத் தேடி நான் எங்கோ செல்லுகின்றேன். பெருமைபெற்ற பறம்பே கலங்கிச் செயல் இழந்தவனாகக் கண்ணிர் சோர உன்னைத் தொழுது வாழ்த்திச் செல்லுகின்றேன். -

சொற்பொருள்: 1. மட்டு-மது இருந்த சாடியை.3,பெட்டாங்கு - விரும்பிய பரிசே, பழுளிை - முதிர்ந்து 4 நட்டனைமன் - எம்மோடு நட்புச் செய்தாய். இனி - இப்பொழுது. 6. நிற்பழிச்சிச் சேறும் - நின்னை வாழ்த்திச் செல்லுதும். 7. பெயர் - புகழ், 9. நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்து - மணம் கமழும் கரிய கூந்தலை யுடையவரான இவரைத் தீண்டுதற்கு உரியவரை நினைத்து.