பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

133


வயல்அகம் நிறையப் புதற்பூ மலர, மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண் ஆமா நெடுநிறை நன்புல் ஆரக் 5 கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப், பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே, பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும் ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. 10 மலை நிலமாயிருந்த இந் நாட்டிலே பாரியின் செங்கோல் ஆட்சி நடந்தது; மழை பொய்ப்பினும் விளைவு மிகுந்திருந்தது; புதலிடத்துப் பூ மலர்ந்தது; பசுவினம் நல்ல புல்லை மேய்ந்தது; மக்களும் பலராயினர்! ஆ! அதுவே முல்லையரும்பு போன்ற அரும்பு வளையணிந்த இம் மகளிரின் தந்தை நாடு, முன்னர் இருந்த நிலை! இன்றோ, அவை அனைத்தும் அழியக் காண்கின்றேனே!

சொற்பொருள்: 1.மைமீன் - சனிமீன். புகையினும் புகையோடு கூடிப் புகையினும், தூமம் தூமகேது. 2. ஒடினும் போக்குறினும் 3. நிறைய - விளைவு மிக. 4. மனைத்தலை - மனையிடத்து. அமர்க்கண் ஆமா - மேவிய கண்ணையுடைய ஆமாவினது. 5. ஆர - மேய. 6. கோல் செம்மையின் - கோல் செவ்விது ஆகலின் பல்கி - பலராக 7. பிள்ளை வெருகின் - இளைய வெருகினது. வெருகு - பூனைவகை.8.முள் எயிறு கூரிய பல்.9.முகைக்கும்-அரும்புகின்ற. அரிவையர் - பாரி மகளிர்.

118. சிறுகுளம் உடைந்துபோம்!

பாடியவர்: கபிலர். திணை: பொதுவியல். துறை : கையறு நிலை.

(சிறு குளம் கீள்வது மாதோ' எனப் பறம்பது நிலைக்கும், அதற்கு உரித்தானவராக இருந்த பாரிமகளிரது. நிலைக்கும் இரங்கிக் கூறிய செய்யுள் இது)

அறையும் பொறையும் மணந்த தலைய, எண்நாள் திங்கள் அனைய கொடுங் கரைத் தெண்ணிச் சிறுகுளம் கீள்வது மாதோ கூர்வேல் குவைஇய மொய்ம்பின், தேர்வண் பாரி தண்பறம்பு நாடே! 5 கூர்வேலேந்திய திண் தோளான்; தேர் வண்மையாற்

சிறந்தவன்; அவனே பாரி! அவனது குளிர்ந்த பறம்புநாடு இது. அந் நாட்டின்கண் விளங்கும் எட்டாம் பக்கப் பிறை போன்ற இச் சிறு