பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

புறநானூறு - மூலமும் உரையும்


தெளிநீர்க்குளம், தன்னையும் பாதுகாப்பாரின்றி உடைந்தேதான் போவதுபோலும் (பறம்பு நாட்டு மக்கள் பலர் வெளியேறி விட்டனராக, ஆங்குள்ள ஒருர்த் தெண்ணிர்க் குளத்தைக் கண்டு புலவர் வருந்திப் பாடியது) *

சொற்பொருள்: 1. அறையும்-பாறையும்.பொறையும் குவடும். 2. எண்நாள் திங்கள் - எட்டாம் பக்கத்துப் பிறைபோலும். கொடுங்கரை - வளைந்த கரைகளை யுடைத்தாகிய, 3. கீள்வது பாதுகாப்பார் இன்மையின் உடைவது. 5. தேர் வண் பாரி - தேர் வண்மையைச் செய்யும் பாரியது.

119. வேந்தரிற் சிறந்த பாரி

பாடியவர்: கபிலர். திணை: பொதுவியல். துறை : கையறு நிலை. சிறப்பு: நிழலில் நீளிடைத் தனிமரம் போல விளங்கிய பாரியது வள்ளன்மை. -

(பாரியின் மறைவுக்கு இரங்கி நெஞ்சழிந்து கூறியது இச் செய்யுள்)

கார்ப்பெயல் தலைஇய காண்பு இன் காலைக் களிற்று முகவரியின் தெறுழ்வி பூப்பச் செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து; மென்தினை யாணர்த்து, நந்துங் கொல்லோ, நிழலில் நீளிடைத் தனிமரம் போலப் 5

பணைகெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

கார் பெய்து மாறியது. அதனையடுத்து, யானை முகத்துப் புள்ளிபோலப்பறம்புமலைச்சாரலில் எங்கும் புத்தம் புது மலர்கள் பூத்தன. அவ் வேளையிலே, செம்புற்றின் ஈயலை இனிய மோரோடுங் கூட்டிச் சமைத்த புளிங்கறியை உண்போம். அத்துடன், சிறு தினையான புதுவருவாயும் மிக உடைத் தாயிருந்தது அந்நாடு. எல்லாம் முன்பு நிழலற்ற நெடிய வழியில், தனிமரம்போல் நின்று, வேந்தரினும் மிகுதியாக வழங்கும் வண்மையுடைய பாரியின் இந் நாடு, அவனை இழந்துவிட்ட காரணத்தால், இனி அழிந்தேதான் போய்விடுமோ?

சொற்பொருள்: 1. கார்ப்பெயல் தலைஇய கார்காலத்து மழை பெய்து மாறிய. 2. களிற்று முகவரியின் - களிற்று முகத்தின்கண் புகர் போல, தெறுழ்வீ - தெறுழினது மலர்; தெறுழ் என்றது, காட்டகத்தொரு கொடி புளிமர் என்று உரைப்பாரு முளர். 3. ஈயல் ஈசல். இன் அளைப் புளித்து - இனிய மோரோடு