பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

137


புலவரிடத்துப் பொதுநோக்கம் கொள்வதைக் கைவிட்டு விடுவாயாக. அவரவர் தகுதிக்குத் தக்கவாறு அதனை யயிந்து அதற்கேற்பவே வழங்குவாயாக! -

122. பெருமிதம் ஏனோ?

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. திணை: பாடாண். துறை: இயன் மொழி.

(அரசனது இயல்புகளின் செவ்விதோன்ற வியந்து கூறுவராகப் பாடினமையின், இயன் மொழி ஆயிற்று)

கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார், கழல்புனை திருந்து அடிக் காரி நின் நாடே, அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே, வியாத் திருவின் விறல் கெழு தானை மூவருள் ஒருவன், துப்பா கியர் என, 5

ஏத்தினர் தரூஉங் கூழே, நும்குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே: வடமீன் புரையுங் கற்பின், மடமொழி, அரிவை தோள் அள அல்லதை, நினது என இலைநீ பெருமிதத் தையே. 10

கடலால் கொள்ளவும் படாதது; பகைவர் கொள்ளவும் நினையாதது; வீரக்கழல் முழங்கும் காரியின் திருக்கோவலூர் நாடு. அது முழுதுமே அந்தணர்களது உடைமையாயிற்று. மூவேந்தருள் ஒருவருக்குத் துணையாக வேண்டும் என அவர் விரும்பி வந்து தந்த பெரும் பொருள்கள், நின் குடியை வாழ்த்தி வரும் பரிசிலரின் உடமையாயின. அதனால், கற்பிற் சிறந்த நின் மனைவி யொருத்தியே நின் உரிமையுடையவள் என்பதன்றி, வேறொன்றும் நினக்கு உரிமையுடையதென இல்லையானாய்! இருந்தும், செருக்குடன் விளங்குகின்றனையே! இதன் காரணம்தான் என்னையோ, பெரும!

சொற்பொருள்: 1. உடலுநர் - பகைவர். ஊக்கார் அதனைக் கொள்ளுவதற்கு மேற்கொள்ளார். 2. திருந்து அடி - இலக்கணத் தால் திருந்திய நல்ல அடியையுடைய, 3 அழல் புறந்தரூஉம் - வேள்வித் தீயைப் பாதுகாக்கும்.5.மூவருள் ஒருவன் துப்பாகியர் என - மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டுமென்று. 6. ஏத்தினர் தரூஉம் கூழ் - அம் மூவர்பால் நின்று வந்தோர் தனித்தனிப் புகழ்ந்து நினக்குத் தரும் பொருள்.7.இரவலரது பரிசிலருடையது.வடமீன் புரையும் - வடதிசைக்கண் தோன்றும் அருந்ததியை யொக்கும். மடமொழி - மடம்பட்ட மென்மொழி.