பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

புறநானூறு - மூலமும் உரையும்


123. மயக்கமும் இயற்கையும்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: மலையமான்

திருமுடிக்காரி. திணை : பாடாண். துறை : இயன்மொழி.

(அரசனது கொடைவளத்தை - வியந்து பாடிப் போற்றுகின்றார் புலவர்)

நாட்கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கெழு முள்ளுர் மீமிசைப் 5

பட்ட மாரி உறையினும் பலவே.

மதுவுண்டு மயங்கினோர் நாளோலக்கத்திலே மகிழ்வுடன் இருக்கும்போது, தேரையும் அறியாதே வழங்கிவிடுவர். அது நிகழ்வது மிகவும் எளிது. காரியோ, அவ்வாறு மதுமயக்கம் ஏதும் இன்றியே, உள்ளத்தில் விருப்பமுடன், வரும் இரவலர்களுக்கு தேர்களாகவே வழங்குகின்றனனே! ஒன்றிரண்டல்ல அவையும்! முள்ளுர் மலையில் வீழும் மழைத்துளிகளினும் அவன் வழங்கிய தேர்கள் பலவாகும்மே!

சொற்பொருள்: 1. நாள்மகிழ் மகிழின் - நாளோலக்கத்துக் களிப்பையுண்டாக்கும் கள்ளினை யுண்டு மயங்கின் 4 மகிழாது - மது நுகர்ந்து மகிழாது. இழை அணி நெடுந்தேர் - பொற் படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர். 6 மாரி உறையினும் பல - மழையினது துளியினும் பல.

124. வறிது திரும்பார்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன் : மலையமான் திருமுடிக்காரி. திணை : பாடாண். துறை : இயன்மொழி.

('திறனன்று மொழியினும், வறிது பெயர்குநர் அல்லர்’ எனக் காரியது கொடை மேம்பாட்டைப் பாடிப் போற்றுதலால், இயன்மொழி ஆயிற்று)

நாளன்று போகிப், புள்ளிடைத் தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும், வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்

பாடு ஆன்று, இரங்கும் அருவிப் பீடுகெழு மலையற் பாடி யோரே. 5