பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

புறநானூறு - மூலமும் உரையும்


(வேள் ஆயது கொடை வென்றியை வியந்து பாடிப் போற்றுகின்றது செய்யுள்)

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, வேங்கை முன்றில் குரவை அயரும் தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்; ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல், 5 இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று, வானம் மீன்பல பூப்பின், ஆனாது ஒருவழிக் கருவழியின்றிப் பெருவெள்ளென்னிற், பிழையாது மன்னே. இனிய சுளைகளையுடைய பலாமரம் செறிந்த ஆயினது வளமலையிலே, மூங்கிற் குழலிலே இருந்த மதுவை உண்டு, வேங்கை நீழல் செய்யும் சிறுமனை முற்றத்தே, குறமக்கள் குரவைக் கூத்தாடுவர். அம் மலைக்கு இறைவனான கொல் போர் வல்ல ஆய்அண்டிரன், இரப்போர்க்கு வழங்கிய யானைகளோ மிகவும் பலவாகும். வானம் முழுவதும் மீனால் நிறையினும், அதனினும் எண்ணால் மிக்கனவாகும் அவை. அத்தகையோனின் புகழ் ஓங்குக!

சொற்பொருள்: 1. குறி இறைக் குரம்பை - குறுகிய மறைப்புடைய சிறிய மனையின்கண். 2. வாங்கு அமைப் பழுனிய தேறல் - வளைந்த முங்கிற் குழாயின்கண் வார்த்திருந்த முதிர்ந்த மது. மகிழ்ந்து - நுகர்ந்து. 3. வேங்கை முன்றில் வேங்கை மரத்தையுடைய முற்றத்தின்கண். 6. ஈத்த யானையின் கொடுக்கப்பட்ட யானைத் தொகை போல, கரவு இன்றி - மேகம் மறைத்தல் இன்றி. 8. ஒருவழிக் கருவழி இன்றி ஒரிடத்தும் கரிய இடம் இல்லையாக, 9. பெரு வெள்ளென்னின் - பெருக வெண்மையைச் செய்யுமாயின்.பிழையாது மன்-அம் மீன்தொகை அதனுக்குத் தப்பாது யானையிற் பிழையாது என இயையும். மன்:

அசை. -

130. சூல் பத்து ஈனுமோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப் பட்டோன். ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(அரசனது கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறினமையின், இது இயன்மொழி ஆயிற்று. நின் நாட்டு இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ? எனக் கேட்பது, ஆயின் கொடைச் சிறப்பைக் காட்டுவதாகும்)