பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

147


('மெல்லியல் விறலி. காணிய சென்மே” என் விறலியை ஆற்றுப் படுத்தியமையின் விறலியாற்றுப்படை ஆயிற்று)

மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற் கேட்பின் அல்லது, காண்பறி யலையே; காண்டல் சால வேண்டினையாயின், மாண்டநின் விரை வளர் கூந்தல் வரைவளி உளரக், கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, 5

மாரி யன்ன வண்மைத்

தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

மெல்லிய இயல்பினையுடைய விறலியே! வேள் ஆயின் புகழைக் கேட்டனையேயன்றி, அவன் வடிவைக் கண்டறியாதவள் நீ, அவனைக் காண விரும்பினாயானால், நின் கூந்தலைக் காற்று அசைத்து மயிற்பீலி போலப் பரக்கச் செய்ய, இம் மலை வழியே. நடந்து, மழை போன்று வழங்கும் வேள் ஆயைக் காண, இப்பொழுதே போவாயாக. ('மழையின் பயனாக விளைவுகள் மிகும்; அதுபோல ஆயின் கொடையால் நீயும் வளப்படுவாய் என்பது இது) -

சொற்பொருள்: 4. விரைவளர் கூந்தல் - மணம் வளரும் கூந்தல். வரை வளி உளர வரை இடத்துக் காற்று வந்து அசைப்ப 5. காண்வர இயலி - காட்சியுண்டாக நடந்து. 7. காணிய காண்க சென்மே - செல்வாயாக.

134. இம்மையும் மறுமையும்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப் பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

('ஆய் அறவிலை வணிகன் அல்லன் அஃதாவது, இம்மை மறுமை என்னும் ஈரிடத்தும் எதிர்ப்பயன் கருதாது ஈதலிற் சிறந்தவன் என்பதாம்)

'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அலன்;

பிறரும் சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.

‘இன்றைக்குச் செய்த ஒரு நற்செயல் பின்னொரு காலத்தே நமக்கு உதவியாக அமையும் என்று, பின் வருகின்ற ஊதியங்கருதி அறம்செய்பவன் ஆய் அல்லன். அவன் கைவண்மை, சான்றோர் சென்ற அறவழியிலே தானும் செல்லுதல் வேண்டும்’ என்ற