பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

புறநானூறு - மூலமும் உரையும்



140. தேற்றா ஈகை'

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பரிசில் விடை

(பரிசில் பெற்ற புலவர், ஆ யது ஈகைத்திறனை வியந்து பாடுதலால் பரிசில் விடை ஆயிற்று. 'கொடுப்போர் ஏத்தல்” என்னும் துறைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல்.புறத். சூ.29)

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் மடவன், மன்ற; செந்நாப் புலவீர்! வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை ஆக, யாம் சில அரிசி வேண்டினெம் ஆகத், தான் பிற 5 வரிசை அறிதலின், தன்னும் தூக்கி, இருங்கடறு வளைஇய குன்றத் தன்னஓர் பெருங்களிறு நல்கி யோனே! அன்னதோர் தேற்றா ஈகையும் உளதுகொல்? போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? 10

செவ்விய நாவையுடைய புலவர்களே! பலாமிகுந்த இந் நாஞ்சில் மலைவேந்தன் அறியாமையே உடையான் போலும்! விறலியர் பறித்த இலை உணவின்மேல் தூவுவதற்குச் சில அரிசியே வேண்டினோம். அவனோ, எம் வறுமையை எண்ணாது, தன் மேம்பாட்டையே எண்ணியவனாக, மலைபோன்ற பெரிய யானையை எமக்கு அளித்தனன். இவ்வாறு, தெளியாது கொடுக்கும் கொடையும் உலகில் உளதோ? பெரியோனான அவன் முறையறிந்து ஈதலைச் செய்யானோ! (குறை கூறுவது போலப் புகழ்ந்தது இது)

சொற்பொருள்: 1. நாஞ்சிற் பொருநன் - நாஞ்சில் மலைக்கு வேந்தன். 2 மடவன் - அறிவு மெல்லியன். 3. படப்பைக் கொய்த மனைப் பக்கத்தின்கண் பறித்த.4 அடகின் கண்ணுறை ஆக-இலை உணவிற்குமேல் தூவுவதாக. 6. வரிசை அறிதலின் தான் பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிதலான். 7. கடறு வளைஇய சுரஞ் சூழ்ந்த,

141. மறுமை நோக்கின்று! பாடியவர்: பரணர். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பாடாண். துறை: பாணாற்றுப் படை, புலவராற்றுப் படையும் ஆம்.