பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

புறநானூறு - மூலமும் உரையும்


144. முல்லை வேலி நல்லூரான்!

பாடியவர்:பரணர்.பாடப்பட்டோன்:வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி.

அருளா யாகலோகொடிதே இருள்வரச், சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் கார்எதிர் கானம் பாடினே மாக, நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண் கலுழ்ந்து, வார் அரிப்பனி பூண்அகம் நனைப்ப, 5

இணைதல் ஆனா ளாக, இளையோய்! கிளையை மன், எம்கேள்வெய்யோற்கு? என யாம்தன் தொழுதன்ம் வினவக் காந்தள் مهنية " முகைபுரை விரலின் கண்ண் துடையா, - ‘யாம், அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி, 10 எம்போல் ஒருத்தி நலன்நயந்து, என்றும் வரூஉம் என்ப; வயங்கு புகழ்ப் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு, முல்லை வேலி, நல்லு ரானே! நின் வீட்டின் முன் நின்று செவ்வழிப்பண் பாடி நின்றேம். கண் கலங்கி வீழும் நீர் மார்பை நனைப்ப வந்தாள். இளையோய்! எம் கேண்மையை விரும்பும் பேகனுக்கு நீவிர் உரிமை உடையரோ?' என அவ்வன்னையை வணங்கிக் கேட்டோம். அவள் கைவிரல்களால் கண்ணிரைத் துடைத்தவாறே, 'அவன் கிளைஞர் யாமல்லேம்; எம்போன்ற அழகினை உடையவள் ஒருத்தியைக் காதலித்து, விளங்குபுகழ்ப் பேகன் தேருடனே முல்லை வேலியையுடைய நல்லூரின்கண் இப்பொழுதெல்லாம் வருகின்றான் என்று பலரும் சொல்வர்; கேட்டையோ? என்றனள். அவளுக்கு நீ அருள் செய்யாதது ஏனோ பெருமானே?

சொற்பொருள்: 1. அருளாய் ஆகல் - அருள்பண்ணாயாதல். இருள் - மாலைக் காலம் வந்த அளவில். 2. செவ்வழி பண்ணி - இரங்கற்பண்ணாகிய செவ்வழி என்னும் பண்ணிலே வாசிக்கும் பரிசு பண்ணி, 3. கார் எதிர் - மழையை ஏற்றுக் கொண்ட 5. கலுழந்து - கலங்கி, அரிப்பனி - இடைவிட்ட துளிகள். 6. இளையோய் என்றது. இளமையை உடையவளாகிய கண்ணகியை. 7. கிளைமையுடையையோ? கேள் வெய்யோற்கு - கேண்மையை விரும்புவோனுக்கு. 8 காந்தள் புரை - காந்தள் மொட்டுப் போலும் 10. கேள் - கேட்பாயாக. 11. நலன் நயந்து - அழகைக் காதலித்து. 12. என்றும் வரூஉம் என்ப எந் நாளும் வருகுவன் என்று பவரும் சொல்வர்.