பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

புறநானூறு - மூலமும் உரையும்


சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல நன்னாடு பாட, என்னை நயந்து பரிசில் நல்குவையாயின், குரிசில் நீ . 5

நல்கா மையின் நைவரச் சாஅய், அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன, ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத், தண்கமழ் கோதை புனைய; - . 10 வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!

அடுபோர்ப் பேகனே! நீ தந்த செல்வமும் பிறவும் அவ்விடமே இருக்க! யாம் பாடியதற்கு உவந்து நீ பரிசில் தருகுவ தாயின், நீ அருளாததால் கண்டார் இரங்க நலிந்தவளாகித், துயரால் வருந்தும் நின் தேவியின் கூந்தலிலே நறும்புகை ஊட்டித், தண்மலர் சூடி, அவள் வருத்தம் தீர்க்க, இன்னே நின் குதிரைகள் தேரிற் பூண்பனவாகுக! இதுவே, நின்பால் யாம் வேண்டுவதாகிய ஒரே பரிசில்!

சொற்பொருள்: 1. வெறுக்கை - செல்வம். 3 - 4. வன்புல நன்னாடு பாட - நினது வலிய நிலமாகிய நல்ல மலை நாட்டைப் பாட 4. நயந்து - காதலித்து. 6. நல்காமையின் அருளாமையால். நைவரச்சாஅய்-கண்டார் இரங்க மெலிந்து.7. அரிவை கண்ணகி. 8. கலிமயில் கலாவம் - தழைத்த மயிலினது பீலியை. கால் குவித்தன்ன - கால் ஒன்றக் குவித்தாற் போன்ற.9. கோதை - மாலை.

147. எம் பரிசில்!

பாடியவர்: பெருங்குன்றுார் கிழார். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பெருந்தினை. துறை: குறுங்கலி, -

கன்முழை அருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக், கார்வான் இன்னுறை தமியள் கேளா, நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும் அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப் புதுமலர் களுல; இன்று பெயரின் அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

ஆவியர் கோவே! யாம் செவ்வழிப்பண் இசைத்துவரக், கார்ப்பெயல் போலக் கண் நீர் சோரத் தனித்து நின்று கேட்டனள்,