பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lleólusië Gsåssir 161

தனிமையால் கலங்கிய கண்ணினள்; அவள் மையிருங் கூந்தலைக் கழுவிச் செவ்விய மலர் சூடி மகிழும் வண்ணம் இன்றே நீ எழுந்தனையானால், அதுவே எம் பரிசிலாகும். பிற யாதும் யாம் வேண்டேம், பெருமானே!

சொற்பொருள்: 2. வந்ததை - வந்ததற்கு. 3. கார் வான் இன்னுறை - கார் காலத்து மழையினது இனிய துளி வீழ்கின்ற ஒசையை கேளா - கேட்டு. 4. புலம்பு கொண்டு உறையும் - தனிமை கொண்டிருந்த 5. அம்மா அரிவை - அழகிய மாமை நிறத்தினை யுடைய அந்த அரிவையது. நெய்யொடு துறந்த - நெய்யால் துறக்கப்பட்ட, 7. மண்ணுறு மணியின் ஒப்பமிடப்பட்ட நீலமணியினும். மண்ணி - கழுவி. 8. கஞல - நெருங்கும் பரிசு. பெயரின் - செல்வையாயின். .

148. என் சிறு செந்நா!

பாடியவர்: வன்பரணர். பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி திணை: பாடாண். துறை: பரிசில்.

(பரிசிலை விரும்பிப் பாடலின், பரிசில் துறை ஆயிற்று)

கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின் அசைவுஇல் நோன்தாள் நசைவளன் ஏத்தி, நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து, கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்; பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் 5

செய்யா கூறிக் கிளத்தல்

எய்யா தாகின்று, எம் சிறுசெந் நாவே.

உயர்மலைக் கோமானான நள்ளியே! அணிகலன் பலவும் களிற்றுடன் கொணர்ந்து, நெற்கூடு விளங்கும் நின் நகரின் கண் இருந்து, வரும் பரிசிலர்க்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றாய். அதனால், எம் நாவானது, பெருமையற்ற மன்னர் பால் புகழ்ச்சி வேண்டிச் சென்று, அவர் செய்யாதனவெல்லாம் கூறிப் பொய்ம்மையாகப் புகழாதாயிற்று. -

சொற்பொருள்: 1. மிசைகறங்கு அருவிய - உச்சிக் கண்ணின்றும் ஆலித்து இழிதரும் அருவியினையுடைய பிறங்கு - உயர்ந்த 2. அசைவு இல் தளர்ச்சியில்லாத நசைவளன் - நச்சப்படும் செல்வத்தை, 4. கூடு - மேற்கூடு. முற்று - சூழ்ந்திருந்த, பரிசில் அளிப்ப - பரிசிலர்க்கு அளித்துவிடுவதால். 5. பீடுஇல் - பிறர்க்கு ஈயும் பெருமையில்லாத. 6. செய்யா கூறிக் கிளத்தல் - அவ்வரசர் செய்யாதனவற்றைச் சொல்லி அவர் குணங்களைப் பொய்யே புனைந்து கூறுதலை எய்யாதாகின்று அறியாதாயிற்று.