பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

165


தம் கணவர் மலைப்பக்கத்து நெடுந்தொலைவு சென்றுள்ள போதும், வந்து பாடுவார்க்குப் பிடியானைகளைப் பரிசாக மனைவியரும் வழங்கும் புகழ்மிக்க கண்டீரக்கோ மரபினன் இவன். ஆதலின், யாம் தழுவினேம். நீயோ நன்னன் மரபினன் (பெண் கொலைபுரிந்த நன்னன்). மேலும், நின்னைத் தழுவலா மென்றாலோ, எம்போற் பாடுவார்க்கு அடைத்த கதவு உடைமையால் எவரும்பாடாதொழிந்தநிலையினையும் உடையது நின் மலை! எனவே, யாம் நின்னைத் தழுவினேம் அல்லேம்.

சொற்பொருள்: 1. பண்டும் பண்டும். முன்பேயும் முன்பேயும். 2. வரைக் கவாஅன் - மலைப்பக்கத்து. 3. கிழவன் - கணவன். 11. அணங்கு சால் அடுக்கம் - தெய்வம் அமைந்த அரைமலைக் கண்ணே. 12. எமர் வரைந்தனர் - எம் இனத்தாரான புலவர் பாடுதலை நீக்கினர்.

152. பெயர் கேட்க நாணினன்!

பாடியவர்: வன்பரணர். பாடப்பட்டோன். வல்வில் ஓரி, திணை: பாடாண். துறை: பரிசில் விடை சிறப்பு: ஒரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது. (பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப் புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல்தலைக் கேழற் பன்றி வீழ, அயலது - ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், 5 வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன், புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும் கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்றுஇவன் விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின், 10

சாரல் அருவிப் பயமலைக் கிழவன், ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ? பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின், கண்விடு தூம்பின் களிற்றுஉயிர் தொடுமின்; . 15 எல்லரி தொடுமின் ஆகுளிதொடுமின், பதலை ஒருகண் பையென இயக்குமின், மதலை மாக்கோல் கைவலம் தம்மின் என்று,