பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

புறநானூறு - மூலமும் உரையும்



இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பிக், 20 'கோ வெனப் பெயரிய காலை, ஆங்குஅது தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும், ஈங்கு ஓர் வேட்டுவர் இல்லை, நின்ஒப் போர் என, வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் 25

தான்.உயிர் செகுத்தமான்நிணப்புழுக்கோடு, ஆன்உருக்கு அன்ன வேளியை நல்கித், தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன் பன்மணிக் குவையொடும் விரைஇக், கொண்ம் எனச், சுரத்துஇடை நல்கி யோனே, விடர்ச்சிமை ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், - 30 ஓம்பா ஈகை விறல்வெய்யோனே!

விறலியே! அருவிகள் வழியும் சந்தனச் சாரலுக்கு உரியவனான வல்வில் ஒரிதான் இவன். அம்பு ஏவுந்தொழிலிலே மிக வல்லவன். எனினும், விலைப்பொருட்டாகக் கொல்லும் எனியனும் அல்லன், மிக்க செல்வன். சந்தனம் பூசிப் புலர்ந்த பரந்த மார்பினன். பல இசைக்கருவிகளையும் இசைத்து இருபத்தொரு பாடல் துறையையும் பாடி வாழ்த்தும்போது வேந்தே எனத் தொடங்கவும், தன்புகழ் தன்னெதிரே கேட்க நாணித், தொடர்ந்து “நின் போன்றார் ஒருவரும் இலரே என வாழ்த்து முன்னர், மான் தசையும் ஆநெய் போன்ற மணமுள்ள மதுவும் கலந்து ஊட்டிப்,பொன்னும் மணித்திரளும் இடைவழியிலேயே எமக்கு வழங்கினான். உயர்ந்த மலைக்குத் தலைவன்; வரையாத ஈகையினை உடையவன்; வெற்றி வீரன்; அந்த ஒரி. அவன் வாழ்வானாக!

சொற்பொருள்: 2. பெரும்பிறிது இரீஇ - இறந்து பாட்டை யுறுவித்து. 3. புழல்தலை புகர்க்கலை - துளை பொருத்திய கோட்டையுடைத்தாகிய தலையினையுடைய புள்ளிமான் கலையை. 4. ஆழல் புற்றத்து - ஆழ்தலையுடைய புற்றின்கண், 15. கண்விடு தூம்பின் - கண்திறக்கப்பட்ட தூம்பாகிய, 16. எல்லரி தொடுமின் - சல்லரியை வாசியுங்கள். ஆகுளி - சிறுபறையை, 17. ஒரு கண் - ஒரு முகத்தை 18, கைவலம் தம்மின் என்று - கையின் கண்ணே தாருங்கோள் என்று.

153. கூத்தச் சுற்றத்தினர்!

பாடியவர்: வன்பரணர். பாடப்பட்டோன்: வல்வில் ஓரி, திணை: பாடாண். துறை: இயன்மொழி.