பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

167


(ஒரியது கொடையியல்பைக் கூறிப் போற்றுவது இச் செய்யுள். இவனிடம் பரிசில் பெற்றார், அந்த வளமிகுதி காரணமாகப் பாடலும் ஆடலும் செய்யார் என்று கூறுகின்றார் புலவர்) • ‘

மழையணி குன்றத்துக் கிழவன், நாளும், இழையணி யானை இரப்போர்க்கு ஈயும், சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு.அமை முன்கை. அடுபோர் ஆனா, ஆதன் ஓரி மாரி வண்கொடை காணிய, நன்றும் 5 சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே, பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப் பசியார் ஆகல் மாறுகொல், விசிபிணிக் 10 கூடுகொள் இன்னியம் கறங்க, - - ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே! மழையணி குன்றத்திற்குத் தலைவன், இரப்போர்க்கு யானைகளாகவே வழங்கி மகிழ்பவன்; பொற்பூணும் கடகமும் அணிந்த கொல்போர் மறவன்; அத்தகைய ஆதன் ஒரியின் மழைபோலும் வள்ளிய கொடையைக் காணச் சென்றது எம் கூத்தச் சுற்றம். அவர்க்குப் பொன்னரி மாலைகளும் பிற நல்லணிகளும் யானைகளும் அவன் வழங்கினான். பசி தீர்ந்து பேரூண் உண்டு களித்தனர் அவர்கள். அதனால், இயங்களை ஒலித்து இசைக்கவும், ஆடவும் பாடவும் மறந்தவராக, அவர் பெரிதும் மாறிவிட்டனர்!

சொற்பொருள்: 2. நாளும் இழையணி யானை - நாடோரும் பட்டம் முதலாகிய பூண்களை அணிந்த யானையை. 3. சூர்ப்பு அமை முன்கை - வளைந்த கடகம் அமைந்த முன் கையினையுடைய. 6. எம் கண்ணுளம் கடும்பு - எம்முடைய கூத்தச் சுற்றம். 7. மணிமிடைகுவளை-மணிமிடைந்த குவளைப் பூவை 8. வால் நார்த் தொடுத்த - வெள்ளிய நாரால் தொடுக்கப்பட்ட 10. பசியாராகல் மாறு கொல் - பசியார் ஆகலானே கொல்லோதான். 1. கூடுகொள் - பலகருவியும் தொகுதி கொண்ட

154. இரத்தல் அரிது! பாடல் எளிது!

பாடியவர்: மோசிகீரனார். பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். திணை: பாடாண். துறை: பரிசில் துறை.