பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

புறநானூறு - மூலமும் உரையும்


வென்று திறையும் கொணரும்; இவ்வாறு, இரு சிறப்பும் உடையதாயிருப்பது கொண்கானங் கிழானின் மலையே யாகும்!

சொற்பொருள்: 3. நச்சிச் சென்ற - தன்பால் பரிசில் நச்சிப் போன. 5. நிறையருந்தானை நிறுத்துதற்கரிய படையையுடைய 6. செம்மலும் உடைத்து - தலைமையையும் உடைத்து.

157. ஏறைக்குத் தகுமே!

பாடியவர்: குறமகள் இளவெயினி, பாடப்பட்டோன். ஏறைக் கோன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது.

(ஏறைக் கோனின் தகுதிகளின் மேம்பாடுபற்றிக் கூறும் சிறந்த சொல்லோவியம் இச் செய்யுள் ஆகும்)

தமர்தன் தப்பின்அதுநோன் றல்லும், பிறர்கை யறவு தான்நாணுதலும், படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும், வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும் நூம்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன் 5 சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல், கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்; ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை, எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக் கட்சி காணாக் கடமான் நல்லேறு 10

மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை இரும்புலிப்புகர்ப்போத்து ஒர்க்கும் பெருங்கல் நாடன் - எம் ஏறைக்குத் தகுமே. தமர் தப்புச் செய்தால் அதைப் பொறுத்தலும், பிறர் வறுமைகண்டு உதவாத நிலைக்கு இரங்கித் தான் நாணுதலும், பிறர் பழி கூறாத போராற்றலும், மூவேந்தர் அவையின் கண்ணே தலைநிமிர்ந்து நடத்தலும், பிற தலைவர்களே! தும் போன்றார்க்குத் தகுவனவல்ல. எம் தலைவன்; வில் வளைத்தலான் அகன்ற மார்பும்; கொல்லும் வேலும், காந்தட் கண்ணியும் உடையவன்; முகில் தங்கும் உயர்மலையும், கலைமான் பிணையை அழைக்கும் குரலைப் புதருள் கிடக்கும் ஆண்புலியும் செவிதாழ்த்துக் கேட்கும் தன்மையும் உடைய மலைநாட்டுத் தலைவன், ஏறைக்கோன்! அவனுக்கே அவையெல்லாம் சாலும்!

சொற்பொருள்: 1. நோன்றல்லும் - அது பொறுத்தலும். 2. கையறவு - மிடிமைக்கு 4 ஓங்குபு - மேம்பட்டு 5 நும் மோர்க்கு -