பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - up5πgπρι - φωφώ α-αοτιμώ

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண! இசைமேந் தோன்றிய வண்மையொடு, பகைமேம்படுக, நீ ஏந்திய வேலே!

பறம்பிற் கோமான் பாரியும், கொல்லியாண்ட ஒரியும், காரியூர்ந்த மலையனும், எழினியும், பெருங்கல் நாடன பேகனும், மோசி பாடிய ஆயும், ஆர்வமுடன் வரும் இரவலருடைய துயரினைத் தீர்த்தலிலே வரையாது வழங்கிய பெரு வள்ளலான நள்ளியும் ஆகிய எழுவரும் இறந்தனர். அவரின்றித் துயருறும் இரவலரின் வறுமையைப் போக்க யான் உள்ளேன்’ என்று நீ இருத்தலால், நின்பால் விரைந்து வந்தேன்.மலைச்சாரற் பலாவிலே கனி கண்ட கடுவன் தான் உண்பதன்றி மந்தியையும் கையோச்சி அழைக்கும் முதிரமலைத் தலைவனே! குமணனே! நின் வேல் பகைவரை வென்று உயர்வதாக!

சொற்பொருள்: 1. துவைப்பவும் முழங்கவும். 2. அண்ணல் - தலைமையையுடைய 10, ஈர்ந்தண் சிலம்பின் - மிகக்குளிர்ந்த மலையின்கண். 14. உலைவு - வறுமை. 15. தகைசால் - கூறுபாடு அமைந்த.19. அற்றம் துன்பத்தை.21.வழை சுரபுன்னை.25.அதிரா தளராத முதிரத்துக் கிழவ முதிரம் என்னும் மலைக்குத் தலைவனே. 26. இவண் விளங்கு - உலக முழுவதிலும் விளங்குகின்ற. 2. இசைமேந் தோன்றிய புகழ் மேம்பட்ட 28. பகைமேம்படுக - பகையிடத்து உயர்க,

159. கொள்ளேன்! கொள்வேன்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: குமணன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை. சிறப்பு: வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம்.

("பரிசில் தருக" என வேண்டிப் பாடுதலால் பரிசில் கடா நிலை ஆயிற்று)

வாழும் நாளோடு யாண்டுப்ல உண்மையின், தீர்தல்செல்லாது, என் உயிர் எனப் பலபுலந்து, கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி, நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று, முன்றிற் போகா முதிர்வினள் யாயும்; 5 பசந்த மேனியொடு படர்அட வருந்தி, மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள் பிசைந்துதின வாடிய முலையள், பெரிதுஅழிந்து, குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று, 10