பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

புறநானூறு - மூலமும் உரையும்



மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே, துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்; இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின், தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே, 5

தாள்தாழ் படுமணி இரட்டும், பூநுதல், ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றெனன் ஆகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் 10

நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது என, வாள்தந் தனனே, தலை எனக்கு ஈயத், தன்னிற் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின், ஆடுமலி உவகையோடு வருவல், ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே 15

இவ்வுலகிலே நிலைபெறக் கருதினோர் தம் புகழை இங்கே நிறுத்தித் தாம் இறந்தனர். ஈயாத பெருஞ்செல்வர் இதனை அறியார். பாவலர்க்கு யானைகளைப் பரிசிலாகக் கொடுக்கும் தலைவனை யான் பாடி நின்றேன். பரிசிலன் வாடிச் செல்லுதல், தான் நாடு இழந்ததினும் மிகவும் இன்னாதது என எண்ணித், தன் தலையை எனக்குத் தருவானாக, அவன் வாளை என்னிடத்தே தந்தனன். அத்தகைய சிறந்த நின் தமையனைக் கண்டு, வெற்றிமிக்க பெருமிதத்தோடு நின்பால் வந்தேன், பெருமானே!

சொற்பொருள்: பூநுதல் ஆடு இயல் யானை - புகர் நுதலையுடைய வென்றி மிக்க யானையை. அருகா - மிகக் கொடுக்கும். 9. கொன்னே - பயன் இன்றியே. 10. பாடுபெறு பெருமை பெற்ற, 12. தலை எனக்கு ஈய தலையை எனக்குத் தருவானாக. 15. நின் கிழமையோன் கண்டு - நின் தமையனைக் கண்டு.

166. யாமும் செல்வோம்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார். பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் திணை: வாகை துறை பார்ப்பன வாகை

(மூவேழ் துறையும் முட்டின்று போகிய வென்றிச் சிறப்பைப் பாடியதால் பார்ப்பன வாகை ஆயிற்று. அந்தணன் வேட்டதற்கும் ஈதற்கும் உரையாசிரியர்கள் காட்டுவர் (தொல், புறத். சூ.16 இளம்பூரணர், சூ.20 நச்சினார்க்கினியர்) -