பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

புறநானூறு - மூலமும் உரையும்


செந்நிறமுள்ள ஆடையாபரணங்களை அணிந்து செல்லுதல் மரபாதலின், செஞ்ஞாயிற்றை உவமை கூறினார் எனினும் அமையும். -

சொற்பொருள் : 1. வலந்தர - வெற்றியைத் தருதலால், 2. களம் - போர் செய்யுமிடம். 3. மருப்பு - கொம்பு, இரத்தம் தோய்ந்து சிவந்திருத்தலால் அவ்வாறு சிவந்துள்ள கொல்லேற்றின் மருப்பை உவமை கூறினார். 5. தோல் - பரிசை கேடயம் எனப்படும். 6. ஒராஅ -தப்பாத இலக்கம்-குறி.8.கறுழ்-முகக் கருவி.10. கதவு-பகைவரின் கோட்டை வாயிற்கதவு. 13. அலங்குஉளை அசைகின்ற தலையாட்டம். உளை - பிடரி மயிர் என்றுங் கூறுவர்.

5. அருளும் அருமையும்! பாடியவர்: நரிவெரூஉத் தலையார். பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல். திணை: பாடாண். துறை: செவியறிவுறுஉ பொருண் மொழிக் காஞ்சியும் ஆம். சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின்

சக்திபற்றிய செய்தி.

(சேரமானைக் கண்டு நல்லுடம்பு பெற்ற காலையிற் பாடிய செய்யுள் இது என்பர். காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி' என்பதனால், செவியறிவுறுஉ ஆயிற்று. அருளும் அன்பும் நீங்கி நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது’ என்றமையால், 'பொருண் மொழிக் காஞ்சி ஆயிற்று. நிரயங் கொள்பவரோடு ஒன்றாது காவலை ஒம்பு என, வேம்பும் கடுவும்போல் வெய்தாகக் கூறி, அவற்கு உறுதி பயத்தலின், வாயுறை வாழ்த்தும் ஆயிற்று (தொல், புறத். சூ. 35 நச்)

எருமை அன்ன கருங்கல் இடை தோறு, ஆனிற் பரக்கும் யானைய, முன்பின், கானக நாடனை! நீயோ, பெரும! நீயோர் ஆகலின், நின்ஒன்று மொழிவல், அருளும் அன்பும் நீக்கி நீங்கா 5 நிரயங் கொள்பவரோடு ஒன்றாது காவல், குழவி கொள்பவரின், ஓம்புமதி: அளிதோ தானே, அது பெறல் அருங் குரைத்தே.

எருமை போன்ற கரிய பாறைகள் பொருந்திய இடமெங்கனும் இடையிடையே பசுக்கூட்டம் போன்ற யானைகள் உலவும் வலியமைந்த காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆதலின், ஒன்று சொல்வேன் கேட்பாயாக: அருளையும் அன்பையும் தம் வாழ்விலிருந்து நீக்கி விட்டவர்