பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

புறநானூறு - மூலமும் உரையும்



சொற்பொருள்: 1 ஓரை ஆயத்து - விளையாட்டுத் திரட்சிக்கண். 5. புனலம் புதவின் - நீர் வழங்கும் வாய்த் தலைகளை யுடைய. 6. பெருமா விலங்கைத் தலைவன் - பெரிய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன்.13.அவன் கழிமென் சாயல்- அவனது மிக்க மெல்லிய சாயல்.

177. யானையும் பனங்குடையும்! பாடியவர்: ஆவூர் மூலங்கிழார் பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி. திணை: பாடாண். துறை: இயன் மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும் வாரி வழங்கிய கொடை யியல்பைப் பாடுகின்றார் புலவர்) *

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர், வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப், பாடிப் பெற்ற பொன்னணி யானை, தமர்.எனின், யாவரும் புகுவ, அமர்எனின், திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக், 5 கள்மாறு நீட்ட நணி நண இருந்த குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப், புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர் தீம்புளிக் களாவொடு துடரி முனையின், மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக், - 10 கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும், பெரும்பெயர் ஆதி, பிணங்களிற் குடநாட்டு, எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞ்ணம் பெருத்த பசுவெள் அமலை, வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, 15

இரும்பனங் குடையின் மிசையும் பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

அவனுக்கு வேண்டியவராயிருந்தால் எளிதே செல்லலாம். போரிட என்றால், திங்களும் நுழையாப் பொறிகள் பல பொருந்திய இட்டிவாயிலை உடையது அவனது அரண். கள்ளினை ஒருவருக்கொருவர் மாறிமாறி நீட்டுமளவு நெருக்கமாக அமைந்த பல அரண்களையுடையது அவ்வூர். அவ்வாறு நீட்டிய கள்ளினை நிரம்பவும் உண்டு செருக்கி, அதன்மேலும் புளிப்புச் சுவையை விரும்பிய ஆடவர், களாப் பழமும் துடரிப்பழமும் தின்பர். தின்றும் அமையாது, கருநாவல் பழத்தைப் பறித்துக் கான்யாற்று மணற்குன்றுகளிலே இருந்தவாறே உண்பர். அத்தகைய ஊரின் தலைவன், புகழ் பெற்ற ஆதி குடநாட்டு மறவர்