பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

புறநானூறு - மூலமும் உரையும்


பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே; அதனால், செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. l

'உலக முழுதும் பொதுமையன்று என் ஒருவனது தனி , உரிமையே எனக் கூறி, ஒரு குடைக்கீழ் ஆண்டுவரும் அரசர்க்கும், இரவும் பகலும் துயிலாது விரைந்து செல்லும் விலங்குகளை வேட்டையாட விரும்பிக் காத்திருக்கும் கல்லாத வறியோனுக்கும், உண்ணப்படும் பொருள் நாழித் தானியமே, உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடைஎன இரண்டே இவைபோலப் பிற உடல் உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே விளங்கும். அதனால், செல்வத்துப் பயனாவது, அஃதற்ற வறியவர்க்கு உவந்து கொடுத்தல், 'யாம்ே துய்ப்பேம்' என்றாலோ, இவ்வாறு எண்ணித் துய்க்கத் தவறினவர் வாழ்வுகளே இவ்வுலகிற் பலவாகும்.

190. எலி முயன் றனையர்!

பாடியவர்:சோழன் நல்லுருத்திரன். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. (வலியுடையோரின் நட்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது)

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர் வல்சி கொண்டு, அளைமல்க வைக்கும், எலிமுயன் றனைய ராகி, உள்ளதம் வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு இயைந்த கேண்மை இல்லாகியரோ! 5

கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென, அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள், பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து, இருங்களிறு ஒருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து - 10 உரனுடையாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ!

சிறியதொரு விளைவயலைக் கண்ணுற்றதும், அங்குள்ள நெற்கதிர்களைத் திருடிக் கொண்டு சென்று, எலி தன் வளையுள் நிறைக்கும். இவ்வாறு செல்வத்தையும் தமக்கென இறுகப் பற்றிச் சேமித்துப் பதுக்கி வைத்து வாழ்பவரின் நட்பு இல்லாது போக, கொடிய காட்டுப்பன்றி தன் இடப்பக்கத்தே தானே இறந்து வீழ்ந்துகிடப்பினும், அன்று தான் அதனை உண்ண எண்ணாது, பெரிய களிறு வலப்பக்கத்தே வீழ்ந்திறக்குமாறு வீழ்த்தி உண்பதே புலியின் இயல்பு. அத்தகைய தறுகண்மை உடையவர் நட்போடு