பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

203


பொருந்திய நாட்கள் உளவாக (தன் முயற்சியால் அறவழியில்

பெற்று உண்பதே சிறந்தது என்பது இது) (புறத்திரட்டில் உள்ள பாடம் புற.16)

191. நரையில ஆகுதல்!

பாடியவர்:பிசிராந்தையர். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி.

(கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தான். அவன்பாற் சென்றார் பிசிராந்தையார். அவரைக் கண்ட அவனோடிருந்த சான்றோருட் சிலர், கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு இல்லையாலோ? என்றனர். அவர்க்கு அவர் கூறிய செய்யுள் இது. செவ்விய வாழ்வு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதன் விளக்கமும் இச் செய்யுள்)

'யாண்டுபல வாக, நரையில ஆகுதல் *யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின், "மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை 5 ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.

(* யாங்காகியரோ என்குதிர் ஆயின் - புறத்திரட்டு)

'நுமக்குச் சென்ற ஆண்டுகளோ பலவாயின; இருந்தும் நரையில்லை யாதலையும் உடையீரே, எவ்வாறு இந்நிலை பெற்றீரோ? எனக் கேட்போரே, மாட்சியுடையவள் என் மனைவி; மக்களோ அறிவு நிரம்பியவர்; ஏவலரோ யான் காண்பது போன்றே எதனையுங் காணும் இயல்பினர் எம் அரசனும் அறமல்லவை செய்யானாக முறையே காத்து வருகின்றனன்; இவற்றிற்கும் மேலாகக் கல்வியால் நிறைந்து அதற்கேற்பப் புலனுணர்வுகளை அவித்து உயர்ந்த குறிக்கோளினரான சான்றோர் பலர் யான் வாழும் ஊரின் கண்ணே வாழ்கின்றனர் (அதனால், எனக்குக் கவலையற்ற வாழ்க்கை அமைந்தது; யானும் நரையற்றேன் என்கிறார் புலவர். பாண்டியன் அறிவுடை நம்பியின் செங்கோன்மைத் திறத்தை இவர் போற்றலும் காண்க.) யாங்காகியரோ என்குதிர் ஆயின் - புறத்திறட்டு)