பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HeSykié Gsólseir 2O7

ஒல்லாது ஒல்லும் என்றாலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும், இரண்டு வல்லே, 5 இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் புகழ்குறை படுஉம் வாயில் அத்தை அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம், அதனால், நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும் 10

வெயிலென முனியேன், பனியென மடியேன், கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை, நாணலது இல்லாக் கற்பின் வாணுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வம் அத்தை; சிறக்க நின் நாளே! 15

தம்மால் இயன்ற பொருளை மனம் ஒப்பிக் கொடுத்தலும், அப்படித் தர இயலாதபோது இல்லையெனக் கூறுதலும் தாளாண்மை உடையார்பால் உள்ளனவே. இயலாததனை இயலும் என்றாலும், இயன்றதனையும் இல்லையென மறுத்தலும், இரப்போரை மெலிவித்தலும் ஈயும் இயல்பு இலாரோ இவர்' எனப் புகழ் குறைபடச் செய்து விடுவதாம். நீ என்பாற் பெய்ததும் அவ்வாறே ஆயிற்று. இதுவரை காணாத ஒன்றை இன்று கண்டனன். வெயிலோ பனியோ எதனையும் பொருளாக்காது, கல்லாகிக் கரையாது நிற்கும் என் வறுமையோடு, நானல்லாது வேறில்லாத என் கற்புடைய மனைவியின் நிலையை நினைந்து நானும் போகின்றேன். நின் வாழ்நாள் சிறப்பதாக நோயற்று நின் புதல்வர் வாழ்வாராக! (புலவர் மனம் நொந்து சொல்லுதல் இது)

197. நல்குரவு உள்ளுதும்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

(பரிசில் வேட்டுப் பாடுகின்ற செய்யுள் இது. உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளோம் என்று உரைக்கும் பண்பை இதன்கண் காண்க)

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,

(1. விரை செலல் - புறத்திரட்டு)