பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

புறநானூறு - மூலமும் உரையும்


பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து, அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் 15 பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப், பணியியர் அத்தை நின் குடையே; முனிவர் முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே! இறைஞ்சுக, பெரும, நின்சென்னி, சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! - 20

வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார் நாடுசுடு கமழ்புகை எறித்த லானே! செலிஇயர் அத்தை, நின் வெகுளி, வால்இழை மங்கையர் துணித்த வாள்முகத்து எதிரே! - - ஆங்கு, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய 25

தண்டா ஈகைத் தகைமாண் குடுமி! தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும், மன்னுக, பெரும! நீ நிலமிசை யானே!

இமயமே வட எல்லையாகவும் குமரிக்கோடே தென்னெல்லையாகவும், கீழ்க்கடலே கிழக்கு எல்லையாகவும், மேற்கடலே மேற்கு எல்லையாகவும் அமைந்தது நின் நாடு. இவ்வெல்லையுள் அமைந்த பெருநாட்டின் பேரரசன் நீ! நிலம், வான், சுவர்க்கம் என்ற மூவுலகத்தும், நிலத்தின் கீழாகிய பாதலத்தும், சுவர்க்கத்தின் மேலாகிய ஆனிலை உலகத்தும் பரவிய நின் புகழ் பெரிது! நின் முடிவுகள் சமனாக விளங்குக! படை குடி முதலியன நின்னாட்டில் சிறந்து ஓங்குக! எதிர்த்த பகைவர் பெரும்படையின் வலிதொலைத்து, அவர் அரண்களை அழித்துச் சூறைகொண்டு, அவற்றைப் பரிசிலர் மகிழ வழங்கும் அருளாளன் நீ! நின் வெண்கொற்றக் குடை முக்கண்ணன் கோயிலை வலம் வருங்கால் மட்டுமே தாழ்ந்து விளங்குக! மறையாளர் வாழ்த்தும்போது நின் தலை தாழ்க! நின் தலைமாலை பகைவர் நாட்டை எரியிட்டு எழும் வெம்மையால் வாடுக! நின் சினம் நின் தேவியர் புன்சிரிப்பின்முன் தணிக வெற்றி பல பெற்றும் அதனால் தருக்காது, உள்ளத்துள் அடக்கமுடன் வாழும் வண்மையும் தகுதியும் உடைய குடுமியே! தண்கதிர் நிலவும், வெங்கதிர் ஞாயிறும் போன்று நீ உலகத்து நிலைபெற்று வாழ்வாயாக! ('குடை தாழ்வது இறைவன் ஒருவனுக்கே தலை தாழ்வது சான்றோர்க்கே, சினந் தாழ்வது வாழ்க்கைத் துணைவியின் முன்னரே, மாலை வாடுவது பகைவர் நாடழிக்கும் எரியாலேயே’எனக் கூறிப் புகழ்கிறார் புலவர். வெற்றி வேந்தனும்