பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

புறநானூறு - மூலமும் உரையும்



199. கலிகொள் புள்ளினம்!

பாடியவர்: பெரும்பதுமனார். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

(பரிசிலை விரும்பிப் பாடிய செய்யுள்; ஆதலின், பரிசில் கடாநிலைத் துறை ஆயிற்று. பாடப்பட்டோன்: பெயர் விளங்கவில்லை)

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம் பெருநல் உண்டனம் என்னாது பின்னும்

செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம், அனையர் வாழியோ இரவலர்; அவரைப் புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் 5

உடைமை ஆகும், அவர் உடைமை; *அவர், இன்மை ஆகும், அவர் இன்மையே.

(i. உண்டும் அமையாது - புறத்திரட்டு 2. அவர் என்ற சொல் புறத்திரட்டில் இல்லை.)

நேற்றுண்டோமே என அமையாது, பல்பழம் நிரம்பிய ஆலமரத்தினை நோக்கிப், பின்னும் பின்னும் செல்வன புள்ளினம். அவை போல்பவரே இரவலர். அவரைப் புரந்து காப்பவர் செல்வம் அவர் செல்வமாகி உதவும். அவர் வறியராயின், இரவலரும் வறுமையால் துயருறுவதன்றி வேறு யாதும் வழியின்று. 200. பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!

பாடியவர்: கபிலர். ப்ாடப்பட்டோன் :விச்சிக்கோன் திணை: பாடாண். துறை: பரிசில். குறிப்பு: பாரி மகளிரைக் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.

(இம் மகளிரை யாம் தரக் கொள்வாயாக என்று கூறலால் 'பரிசிற்றுறை ஆயிற்று) -

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின் கனி கவர்ந்து உண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக் கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! 5 நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல், களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை, விளங்குமணிக் கொடும்பூண், விச்சிக்கோவே! இவரே பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும்பு இருப்பப்பாடா தாயினும், 10