பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμιάσελκά 211

கறங்குமணி செடுந்தேர் கொள்க' எனக் கொடுத்த பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர்; யானே பரிசிலன், மன்னும் அந்தணன், நீயே வரிசையில் வணங்கும் வாள்மேம்படுநன்; நினக்குயான் கொடுப்பக் கொண்மதி, சினப்போர் 15

அடங்கா மன்னரை அடக்கும் மடங்கா விளையுள் நாடுகிழவோயே!

பலாக்கனியுண்ட கரிய விரல்களையுடைய கடுவன், தன் மந்தியுடன், மேகமும் அறியாத உயர்ந்த மலைமுகட்டிலுள்ள மூங்கிலுச்சியிலே துயிலும். அத்தகைய வளமான மலையையுடைய வெற்பனே! நிணந்தின்ற நெடுவேலும், கொடிய கொல்யானையும் உடையோனே! விச்சிக்கோவே கொடிமுல்லைபாடிப் பரிசில் கேளாதாயினும், அதற்கும் கொள்க’ எனச் சொல்லித் தன் தேரையே தந்து புகழ்பெற்ற தலைவனான வள்ளல் பாரியின் மகளிர் இவர்! யானோ பரிசிலன்; மேலும் அந்தணன்! நீயோ, பகைவரை வென்று தாழ்விக்கும் வாள்வலிமை உடையவன். அதனால், அடங்கா மன்னரை அடக்கும் வன்மையும், மடங்கா விளையுளும் உடைய நாட்டின் வேந்தனே! இவரை, யான் நினக்குத் தருகின்றேன்; கொண்டு இனிதே வாழ்வாயாக!

201. இவர் என் மகளிர்!.

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன் இருங்கோவேள். திணை: பாடாண். துறை: பரிசில். குறிப்பு: பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.

('யான் தர இவரைக் கொண் மதி' என்று கூறுதலால் பரிசில் துறை ஆயிற்று)

'இவர்யார்?' என்குவை ஆயின், இவரே,

ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்

முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,

படுமணி யானைப், பறம்பின் கோமான்

நெடுமாப் பாரி மகளிர்; யானே 5

தந்தை தோழன்; இவர் என் மகளிர்; அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே, நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச், செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை, 10. உவரா ஈகைத் துவரை ஆண்டு,