பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

215


கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று; தெண்ணிப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் 5 உண்ணார் ஆகுப, நீர்வேட்டோரே, ஆவும் மாவும் சென்றுஉணக்கலங்கிச், சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும், உண்ணி மருங்கின் அதர்பல ஆகும்; புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை 10

உள்ளிச் சென்றோர் பழியலர் அதனாற் புலவேன் - வழியர், ஓரி! விசும்பின் கருவி வானம் போல - - வரையாது சுரக்கும் வள்ளியோய், நின்னே!

(* பழிப்பின் - புறத்திரட்டு)

'ஒன்றைத் தா என இரத்தல், இழிந்தது; அவ்வாறு இரந்தோர்க்கு 'ஈயேன்” என்று மறுத்தலோ அதனினும் இழிவு உடையதாகும். 'கொள்வாயாக’ என ஒன்றைத் தானே விரும்பிக் கொடுத்தல் உயர்ந்தது; அவ்வாறு கொடுப்பினும் கொள்ளேம்’ என்பது அதனினும் மிக உயர்ந்தது. தண்ணிர் வேட்கையினர் கடல்நீரை உண்ணார், ஆவும் மாவும் கலக்கிய சேற்றுநீர் எனினும், அத் தாழ்ந்த இடத்திற்குச் செல்லும் வழிகள் பலவாகும். இரவலர் பரிசில் பெறாதபோது, தாம் நாடி வந்தவரைப் பழித்துப் பேசாது, தாம் புறப்பட்ட நேரத்தையும் புள் நிமித்தத்தையுமே பழிப்பர். அதனால், நீ எனக்கு இல்லை என்றனை யேனும், நின்னை யான் வெறுப்பவன் அல்லேன். மழைபோல வழங்கும் ஒரியே, நீ நீடு வாழ்வாயாக! -

சொற்பொருள்: 1. புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை புள் நிமித்தத்தையும், புறப்பட்ட நிமித்தத்தையும் பழித்தல் அல்லாது. - -

205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்! பாடியவர்:பெருந்தலைச் சாத்தனார். பாடப்பட்டோன் கடிய நெடுவேட்டுவன். திணை: பாடாண். துறை: பரிசில். -

(பரிசில் பொருளாகப்பாடியமையின் பரிசில்துறை ஆயிற்று. வேட்டுவன் பரிசில் நீட்டித்தபோது, புலவர் பாடிய செய்யுள் இது)

முற்றிய திருவின் மூவர் ஆயினும், பெட்பின்றி ஈதல் யாம்வேண்டலமே