பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•

புலியூர்க்கேசிகன்ட 221

உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின் உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால், அறனில் கூற்றம் திறனின்று துணியப் பிறனாயினன்கொல்? இlஇயர், என் உயிர் என நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும் 10

இடுக்கண் மனையோள் தீரிய, இந்நிலை

விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக்காண்;

அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர்

அருங்கடி முனையரண் போலப் -

பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே. 15

இறைவனே! இதோ பாராய்! மக்களைக் காக்கும் நின் போல்பவரே இவ்வாறு அருள் மறந்தனிராயின், எம்போல் இரவலரே இனி இவ்வுலகில் பிறவாது ஒழிவாராக. குற்றமற்ற கொள்கையளான, எம்மை விரும்பிய காதலியானவள்

உயிரோடிருந்தாள் எனில், எம்மை நினையாதிருத்தல் அரிது.

பிரிவால் வருந்தினவளாகக் கூற்றமும் இறந்தானோ? எம் உயிர் இன்னும் அழிகிலதே? எனப் பலபடப் பிரிவு நோயை வெறுத்துக் கூறுபவள் அவள். அவள் துயரத்தைத் தீர்க்க, இப்போதே யான் செல்லுகின்றேன். நின்னை எதிர்த்தார் அணுகுவதற்கரிய காவலையுடைய அரணினைப்போலப், பெரிய, செயலற்ற என் வறுமையை முன் போகவிட்டு, நான் பின் செல்லுகின்றேன்! நீ தான் வாழ்வாயாக!

சொற்பொருள்: புரைமை உயர்ச்சி. இனையர் ஆயின் இதற்கு ஒத்த அறிவுடையவராய் அருள் மாறுவராயின்.9.இlஇயர் - கெடுவதாக 1. தீரிய தீர்க்கவேண்டி இந்நிலை - இப்போதே 12. உதுக்காண் என்றது அச்செலவை. 15. புலம்பு - வறுமை.

211. நாணக் கூறினேன்!

பாடியவர்:பெருங்குன்றுார் கிழார். பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறை. திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

(தம் நிலையைக் கூறிப் பரிசில் தருமாறு வேண்டுகின்றார் புலவர். அவன் பரிசில் தர நீட்டித்தபோது பாடியதாகவும். கொள்ளலாம்.)

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு அணங்குடை அரவின் அருந்தலை துமிய, நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக், குன்றுதுவ எறியும் அரவம் போல, முரசுஎழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, 5