பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

புறநானூறு - மூலமும் உரையும்



அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென், "வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் எனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் உள்ளியது முடித்தோய் மன்ற முன்னாள் 10

கையுள் ளதுபோல் காட்டி, வழிநாள் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் நாணாய் ஆயினும், நாணக் கூறி என் நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்; பாடப் பாடப்பாடுபுகழ் கொண்டநின் 15

ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச் செல்வல் அத்தை யானே - வைகலும், வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின், பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து, 20

முலைக்கோள் மறந்த புதல்வனொடு மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே.

பாம்புகள் தலை துணிய இடிமுழக்குவது போன்று, பகைவர் வலியழிய முழங்கும் முரசுடன், அவர் எதிர்நின்று வென்றழிக்கும் புகழ்சால் தோன்றலே! நீ வள்ளல்! எமக்குத் தாழ்ந்து பரிசில் நல்குவாய் என நினைந்து உயர்ந்த நோக்குடன் வந்த தகுதிமிக்க பரிசிலன் யான். எம்மை எதிரேற்றுக் கொள்ளாத மாந்தரது கொடுமையையும் நின்பால் கூறினேன். அதனைக் கேட்டும், நீ நினைத்ததையே செய்தாய். முதல் நாள், பரிசில் என் கையிலே வந்துவிட்டது போலவே காட்டினாய். பின்னர் அது பொய்யாகிப் போக யான் வருந்திய வருத்தத்திற்குநீ வெட்கமும் படவில்லை.நின் புகழை யான் நாள்தோறும் பலபடியாகப் பாடப்பாடக் கேட்டு நாணமும் கொண்டாய். செம்மையும் ஆராய்ச்சியுமுடைய யான், என் நா வருந்தப் புகழ்ந்து புகழ்ந்து பாடினேன். முடிவில் வறிதாகவே திரும்புகின்றேன். உணவின்றி வருந்தி, மாறி மாறித் தோண்டி எலிகள் மடிந்த சுவருடைய என் வீட்டிலே, பால் காணாது, பால் குடிப்பதையே நிறுத்திவிட்ட பிள்ளையுடன், என்னை எதிர்பார்த்து வாடி நிற்பாள் என் மனைவி. அவளை நோக்கிப் போகின்றேன். நின் மார்பை வாழ்த்தியே செல்லுகின்றேன். நீ வாழ்க! (இகழ்ச்சியாக வாழ்த்தியது இது)

சொற்பொருள்: 4.துமிய துணிய, அரவம் - முன்னது பாம்பு; பின்னது ஒசை. 9. கொள்ளாமாந்தர் - எம்மை எதிரேற்றுக்