பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

227


என்பவன் உள்ளான். என் உயிரைத் தன்னுயிராக எண்ணிப் பேணும் கலந்த நட்பினன் அவன். செல்வம் உள்ளபோது அவன் வாராது நின்றிருந்தாலும், என் உயிர்க்கு இன்னாமை நேரப்போகின்ற இந் நிலையில், இங்கு வாராது அவன் நிற்கவே, மாட்டான். அறிவீராக, சான்றோரே!” -

சொற்பொருள்: 1. அவைப்பு - குற்றுதல். ஆக்கல் - வடிக்கப் பட்ட சோறு. 2. பொதுளிய தழைத்த, 3. கொளிஇ - பெய்து. புளிமிதவை - புளிங்கூழ், 4. ஆர நிறைய. 6. பொருப்பு என்றது பொதியில் மலையை மன் : அசைநிலை.

216. அவனுக்கும் இடம் செய்க!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. குறிப்பு:வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது. -

("பேதைச் சோழன்’ என்று தன்னுடைய எளிமை தோன்றக் கூறும் செவ்வியைக் காண்க)

கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் காண்டல் இல்லாது யாண்டுபல கழிய, வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும், அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று, ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்! - 5 இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; புகழ்கெட வரூஉம் பொய்வேண்டலனே; தன்பெயர் கிளக்கும் காலை, என் பெயர் பேதைச் சோழன் என்னும், சிறந்த காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை, 10 இன்னதோர்காலை நில்லலன்; இன்னே வருகுவன், ஒழிக்க, அவற்கு இடமே!

'கேள்வி அளவால் தானே அறிந்துள்ளீர். ஒரு போதும் நீங்கள் சந்தித்ததும் இல்லையே. பல ஆண்டுகள் பழகிய நேரடித் தொடர்பு இல்லாமலே உள்ளம் கலந்து பழகியவர் தாமே நீங்கள் இருவரும். இதனால், அவர் இங்கு இந்நிலையே வருவரென்பது எளிதல்ல என்று கருதி, நீங்கள் ஐயப்படாதீர்கள். நிறைந்த அறிவுடையவர்களே! அவன் என்றும் என்னை இகழாத இனிய பண்பினன். உள்ளம் கலந்த நண்பன். புகழ்கெட்டு வரும் பொய்ம்மை வாழ்வை விரும்பாதவன். அவன் பெயரையே ‘சோழன்’ என்று கூறிக்கொள்ளுமளவு பேரன்பு உடையவன். இவ்வாறு யான் துயர் கொண்ட காலத்திலேயும் வாராது அங்கே