பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

புறநானூறு - மூலமும் உரையும்


219. உணக்கும் மள்ளனே!

பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார். பாடப்பட்டோன் : கோப்பெருஞ் சோழன். திணை: பொதுவியல். துறை : கையறுநிலை. - i

(சோழனும் பிறரும் வடக்கிருந்த காலத்து, அவரைக் கண்ட புலவர் இரங்குவாராகக் கூறிய செய்யுள் இது. இவரும் பின்னர் வடக்கிருந்தனர்)

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்,

முழுஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!

புலவுதி மாதோ நீயே, .

பலரால் அத்தை நின் குறிஇருந்தோரே.

ஆற்றிடைக் குறையுள், புள்ளிபட்ட மரநிழலிருந்து உடம்பாகிய தசையை வாட்டுகின்ற மாவீரனே! நின்னோடு கூடி வடக்கிருந்த சான்றோர் பலர். யானும் அவர்போல உடனிருக்க வாராது பிற்பட்டு வந்து இருப்பதற்கு வருந்துகின்றாயோ? (தாம் பிற்பட வரநேர்ந்ததற்கு இவ்வாறு கூறி வருந்துகின்றனர் போலும்)

சொற்பொருள்: 1. உள் ஆற்றுக் கவலை - யாற்றிடைக் குறையுள். புள்ளி - புள்ளிபட்ட மரம். 2. முழுஉ வள்ளுரம் - உடம்பாகிய முழுத்தசையை உணக்கும் - வாட்டும். 3. புலவுதி - யான் இதற்கு உதவாது பிற்பட வந்ததற்கு என்னை வெறுத்தி.4.நின் குறியிருந்தோர் - நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கிருந்தோர். 220. கலங்கினேன் அல்லனோ!

பாடியவர்: பொத்தியார். திணை: பொதுவியல், துறை: கையறுநிலை. குறிப்பு:சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறிதான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது.

பெருஞ்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த

பெருங்களிறு இழந்த பைதற் பாகன் அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,

வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,

கலங்கினேன் அல்லனோ யானே, பொலந்தார்த் 5

தேர்வண் கிள்ளி போகிய

பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

(* இருங்களிறு - புறத்திரட்டு)