பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

233


223. நடுகல்லாகியும் இடங்கொடுத்தான்!

பாடியவர்: பொத்தியார். பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

(கல்லாகியும் இடங்கொடுத்தான் சோழன்; அதுகண்டு, அவ்விடத்தே வடக்கிருந்தாரான பொத்தியார் பாடியது இது. 'நடுகல் ஆகியக் கண்ணும் இடங்கொடுத்து அளிப்ப' என்று

கூறுவது, அத் தெய்வீக நிலையைக் காட்டும்)

பலர்க்கு நிழலாகி, உலகம் மீக்கூறித், தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி, நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும், இடங் கொடுத்து அளிப்ப, மன்ற - உடம்போடு இன்னுயிர் விரும்பும் கிழமைத் 5 தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!

அருளோடு பலர்க்கும் நிழலாக நின்று உலகம் போற்ற வாழ்ந்தாய். அதனினும் சிறப்பாக, வடக்கிருந்து உயிர்நீத்து நடுகல்லான பின்னரும் எமக்கு இடங்கொடுத்து அருளினாய்! உடம்பும் உயிரும் இணைந்ததுபோன்ற பழைய நட்புடையாரிடம் சேர்ந்தார், எவர்தாம் இவ்வாறு பெற்றனர்?

சொற்பொருள்: 1. மீக்கூறி மிகுத்துச் சொல்லி, 2தலைப் போகு அன்மையின் உலகத்தையாளுந்தன்மை முடியச் செலுத்துதற்கு மறுமையை நினைத்தால் முடிவு போகாமையின் 5 கிழமை உரிமை, அவன் நட்பினை வியந்து கூறியது. மீக்கூற எனத் திரிக்கப்பட்டது; ஆணை கூறி என்றும் ஆம் .

224. இறந்தோன் அவனே!

பாடியவர்: கருங்குழல் ஆதனார். பாடப்பட்டோன். சோழன் கரிகாற் பெருவளத்தான். திணை: பொதுவியல், துறை: கையறுநிலை. -

(கரிகாலன் இறந்தது குறித்துப் பாடிய கையறுநிலைச் செய்யுள் இது. அவன் செய்த வேள்வி பற்றிய விளக்கத்தையும் இச் செய்யுளுட் காணலாம்) *

அருப்பம் பேணாது அமர்கடந்தது.உம், துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி, இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்தது.உம், அறம்,அறக் கண்ட நெறிமாண் அவையத்து, முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த 5