பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

புறநானூறு - மூலமும் உரையும்


செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ, பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, இரந்தன்று ஆகல் வேண்டும் - பொலந்தார் மண்டமர் கடக்கும் தானைத் திண்தேர் வளவற் கொண்ட கூற்றே.

(1. கடந்த - புறத்திரட்டு, 2. திண்தோள் - புறத்திரட்டு)

உள்ளத்திலே அவனை ஒழிக்கக் கறுவு கொண்டதாயினும், வெளிப்படஎதிர்நின்று வெகுண்டும், கையொடு தீண்டிவருத்தியும் கூற்றம் அவனை எதிர்த்திருந்தால், அதுகூடப் பிழைத்து இருக்காது. பொன் மாலையினையும், எதிர்நின்று வெல்லும் ஆற்றல்மிக்க படையினையும், திண்ணிய தோளினையும் உடைய வளவனை, அக் கூற்றம், பாடுவார்போலத் தோன்றித் தொழுது வாழ்த்தி இரந்துதான் அவன் உயிரைப் பரிசிலாகப் பெற்றுச் சென்றிருத்தல் வேண்டுமேயன்றி, அவனை எதிர்நின்று வென்று. எடுத்து ஏகியிருத்தல் இயலாது, -

சொற்பொருள்: 1. செற்றன்று ஆயினும் - தன் மனத்துள்ளே கறுவு கொண்டதாயினும் செயிர்த்தன்று ஆயினும் வெளிப்பட நின்று வெகுண்டதாயினும், 2. உற்றன்று ஆயினும் உற்று நின்று கையோடு மெய்தீண்டி வருத்திற்றாயினும் உய்வு இன்று அதற்குப் பிழைத்தல் உண்டாகாது. 6. கூற்று - எமன்.

227. நயனில் கூற்றம்!

பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார். பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

(கூற்றே, இனி நின் பசியைத் தீர்ப்பார் யார்? விரகு இன்மை யின் வித்து அட்டு உண்டனை' என, இவனது ஆண்மையை வியந்து இரங்கிப் பாடுகின்றார் புலவர்)

நனிபே தையே, நயனில் கூற்றம்! விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்; ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும், குருதியம் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய, நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும்நின், வாடுபசி அருத்திய வசைதீர் ஆற்றல் நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்