பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

புறநானூறு - மூலமும் உரையும்



கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப், பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என 5

நச்சி இருந்த நசைபழுது ஆக, அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு, 'அளியர் தாமே ஆர்க' என்னா அறன்இல் கூற்றம் திறனின்று துணிய, ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - . . . 10

வாழைப் பூவின் வளைமுறி சிதற, முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக், கள்ளி போகிய களரியம் பறந்தலை, வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே, ஆங்கு அது நோயின்று ஆக, ஒங்குவரைப் 15 புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின், எலிபார்த்து ஒற்றாது ஆகும்; மலிதிரைக் கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று,

நனியுடைப் பரிசில் தருகம், எழுமதி, நெஞ்சே துணிபுமுந் துறத்தே. 2O "நீடு வாழ்க!” என வாழ்த்தி, யான் தலைவாயிலிலே வந்த காலம் பொருத்தமற்றது. கோடைக் காலத்துக் கொழு நிழலாகிப் பொய்த்தல் அறியாத அறிவுடையோனின் செவிகளிலே விதைத்த பாடல் நன்கு பரிசிலாக விளையும் என்று விரும்பியிருந்த என் விருப்பமும் கெட்டது. சோறுண்ண நினைத்து சோற்றுப் பானையுள் கைவிட, அங்கே எரி எழுந்தது போல, அறமற்ற கூற்றமும் வெளிமானைக் கொண்டு போயிற்று! மகளிர் மார்பிலறைந்தும், வளைகளை முறித்தும் அழப், பரிசிலர் ஏங்க, கள்ளி வளர்ந்த களர்நிலமாகிய பாழ்பட்ட புறங்காட்டினை அவன் சேர்ந்தான். கூற்றம் நோயின்றி வாழ்வதாக! புலி தனக்கு இரையாகக் களிற்றை வீழ்த்த முயன்று, அது தப்பிவிட்டால், எலியைப் பார்த்துப் பாயாது. நெஞ்சமே துணிவினை முன்கொண்டு எழுவாயாக! கடல் மண்டு புனலின் மிகுதிபோல விரைந்து போய், நல்ல மிகுந்த பரிசிலைக் கொண்டு நாமும் வருவோமாக.

சொற்பொருள்: 6. பழுது ஆக பயனில்லையாக 7 குழிசி - பானை அழல் பயந்தாங்கு-சோறு இன்றி எரிபுறப்பட்டாற்போல. 8. ஆர்க என்னா - உண்பாராக என்னாத 9 திறன் இன்று துணிய கூறுபாடு இன்றாகி அவன் உயிரைக் கொள்ளத் துணிய, 13. கள்ளிபோகிய - கள்ளி ஓங்கிய களரியம் பறந்தலை - களர்