பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

249


மயக்குடைய மொழி விடுத்தனன், ஆங்குச் செய்ய எல்லாம் செய்தனன் ஆகலின் - இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! 20 படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!

(1. தீஞ்சேற்ற - புறத்திரட்டு பாடம்)

தொடியணிந்த இளமகளாரை மணந்தான். காவலையுடைய இளமரக்காவின் நறுமணங் கமழும் பூவைச் சூடினான். குளிர்ச்சிதரும் சாந்தைப் பூசினான். பகைத்தோரைக் கிளையோடும் அழித்தான். நண்பரை உயர்த்துப் பேசினான். வலியவரென்று அவரைப் போற்றியும், மெலியவரென்று அவரை இகழ்ந்தும் அறியான். பிறரிடம் இரந்து அறியான். இரந்தவர்க்கு மறுத்துக் கூறவும் அறியான். அரசர்கள் கூடிய அவையத்திலே, தன் ஓங்கிய புகழை விளங்கக் காட்டினான். தன் நாட்டுமேல் வரும் படைகளைத் தன் எல்லையுட்புகாமல் தடுத்து, புறமிட்டு ஒடுபவரிடம் புறக்கொடை கொள்வதன்றி அவரை வெருட்டி அழித்தலும் செய்யான். குதிரையை மனவேகத்தினும் விரைவாகச் செலுத்தினான். தேர் செலுத்தினான். களிறு செலுத் தினான். மதுக்குடங்கள் முற்றவும் தீருமாறு பலர்க்கும் வழங்கினான். மயக்குடைய மொழிபேசாது தெளிந்த சொற்களே பேசினான். இவ்வாறு செய்ய வேண்டுவன அனைத்துமே செய்தனன் அவன். இன்றோ, அவன் மறைந்தான்! இடுவீர்களோ, எரிப்பீர்களோ? அவன் தலையை நீவிர் எதுவும் செய்வீராக. அவன் புகழ் என்றும் எதனாலும் அழியாது இவ்வுலகிலேயே நிலைத்துநிற்கும் என்பதுமட்டும் உறுதியாகும்!

சொற்பொருள்: 2. கடிகாவில் - காவலையுடைய இளமரக் காக்களில் 13. கடவினன் - மனத்தினும் விரையச் செலுத்தினான். 16 தீஞ்செறி - இனிய செறிவை யுடைத்தாகிய, தசும்பு தொலைச்சி னன் - மதுவையுடைய குடங்களைப் பலர்க்கும் வழங்கித் தொலைவித்தனன். -

240. பிறர் நாடுபடு செலவினர்!

பாடியவர்: குட்டுவன் கீரனார். பாடப்பட்டோன் : ஆய். திணை: பொதுவியல். துறை: கையுறுநிலை.

('ஒள் எரி நைப்ப உடம்புமாய்ந்தது என்று வருந்துகின்றனர். “காலன் என்னும் கண்ணிலி எனக் காலனையும் நொந்து கூறுகின்றார்) -

ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், வாடா யாணர் நாடும் ஊரும்,