பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμιάααααά 251.

"திண் தேர்களாகவே இரவலர்க்கு அளித்தவன் குளிர்ந்த மாலையையுடையவன்; ஆய்வள்ளல் வருகின்றான்" என, இந்திரன் கோயிலிலே முரசு முழங்குவதால், வானத்திலும், இடியொலி யாகிய பேரொலியும் எழுகின்றதே!

சொற்பொருள்: ஒண்தொடி - ஒள்ளியதொடி இதனை வாகு வலயம் என்பர். 3. நெடியோன் - இந்திரன். 4. போர்ப்புஉறு போர்த்தலுற்ற, 5. விசும்பினான் - வானத்தின் கண், உருபு மயக்கம்.

242. முல்லையும் பூத்தியோ?

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். பாடப்பட்டோன் : ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. குறிப்பு : குடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம். - - - -

('சாத்தன் மாய்ந்த பின்னர் முல்லையும் பூத்தியோ என முல்லை நோக்கி வருந்திக் கூறுகின்றனர்).

இளையோர் குடார்; வளையோர் கொய்யார் நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப், பாணன் சூடான், பாடினி அணியாள்; ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை 5 முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் ി.പേ? -

ஒல்லையூர் நாட்டிலே, இளைய வீர்ர்கள் கண்ணி சூடாராயினர். வளையணியும் மங்கல மகளிரும் மலர் கொய்யா, ராயினர். பாணனும் மலர் சூடானாயினன். பாடினியும் மலர் சூடாளாயினள். வலிய வேலோனான சாத்தன் இறந்ததனால், இவ்வாறு யாவருமே நல்லணி துறந்திருக்கும் வேளையிலே, முல்லையே, நீ மட்டும் ஏன் பூக்கின்றனையோ?

243. யாண்டு உண்டுகொல்?

பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார். திணை: பொதுவியல், துறை: கையறுநிலை.

இளமை கழிந்தது. அதன் கழிவை நினைந்து வருந்திக் கூறுகின்றனர். அதனால் இதுவும் கையறு நிலை ஆயிற்று. காஞ்சித் திணைத் துறைகளுள், கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை’க்கு நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத்.

சூ.24) . . .

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்,

. - Շ