பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lleólusië Gästäsir 253

இரவலரான இவர் பெரிதும் துன்பம் உற்றவர் என்பதும், தாம் உறுகின்ற துன்பத்தைக் கலையின்மேல் வைத்துக் கூறினர் என்பதும் தெரிகிறது. முன்பின் பாடல்களை நோக்கினால் பொதுவியல் திணையும், கையறுநிலைத் துறையும் கொண்ட் பாடலாக இதுவுமிருந்திருக்கலாம். கிடைத்த இரண்டடியின் கருத்துக்கள், வள்ளல் ஒருவன் துஞ்ச, அதற்கு இறங்கித் தாம் படும் துயரைக் காட்டிப் புலவர் கூறியதாகவே படுகிறது.

245. என்னிதன் பண்பே?

பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை திணை: பொதுவியல், துறை: கையறுநிலை.

('அவன் பெரிது பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைப் பாடிய செய்யுள் இது) -

யாங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே, உயிர்செகுக் கல்லா மதுகைத்து அண்மையின்? கள்ளி போகிய களரியம் பறந்தலை' வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, 5 ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை, இன்னும் வாழ்வல் என்.இதன் பண்பே! (1. கள்ளி போகிய களரி மருங்கின் - வேறு பாடம்)

கள்ளி வளர்ந்த புறங்காட்டிலே, விறகு அடுக்கிய ஈமத்தின்கண், அழற்பாயலிலே அவளைக் கிடத்தினேன்; அம் மடவாள் மேலுலகம் போய்விட்டாள். என் துயரம் எவ்வளவு பெரிதாயினும், என் உயிரையும் போக்கி, அவளுடன் சேர்க்கும் வலியற்றதாயிற்றே! இதன் பண்புதான் என்னே? (அவளோடு தானும் உயிர்விடவில்லையே எனக் கசிந்து வாடுகிறான் மன்னன்)

246. பொய்கையும் தீயும் ஒன்றே!

பாடியவர்: பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு. திணை: பொதுவியல், துறை: ஆனந்தப் பையுள்.

('எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து’ எனக் கணவன் இறப்புக்குப் பின் தீப்பாய்தற்கு முற்படலால் இத்துறை ஆயிற்று)

பல்சான் lரே! பல்சான் lரே!

செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,

பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் lரே!