பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

புறநானூறு - மூலமும் உரையும்


வீழுமாறு, காதற்கனலை மூட்டிவிட்டுத் துயர் செய்தவனான இளைஞனை அன்று கண்டோம். அவனே, இதோ மலையருவி யிலே நீராடிச், செந்தீவேட்டு, முதுகிலே தாழ்ந்து தொங்கும் சடையை உலர்த்திக் கொண்டிருப்பவன் (காதல் தீயினை மூட்டியவனே பின்னர் இல்வாழ்வு பூணுதலை நீத்துத் துறவில் போகக்கண்டு, அவன்பால் கொண்ட மயக்கந் தீராதவரான இவர், இவ்வாறு பாடினர் போலும் மாற்பித்தியார் என்ற பெயரின் அமைதியினையும் இதனால் காணலாம்)

252. அவனே இவன்!

பாடியவர்: மாற்பித்தியார் திணை: வாகை. துறை: தாபத ᎧᎻfᎢ6Ꮘ)Ꮬ.

(இதுவும் முன்செய்யுளைப் போன்றதே. 'நாலிரு வழக்கின் தாபதப் பக்கம் என்பதற்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். சூ.16)

கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்லென் சடையோடு அள்இலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே. 5 இதோ காண்க. அருவி நீரை ஏற்பதால் தன் கருநிறம் மாறித் தில்லை இலைபோன்று நிறம் மாறிய சடையோடு கூடியவனாகச், செறிந்த இலையையுடைய தாளியிலே தளிர் கொய்கின்றானே, இவனேதான், முன்னர் இல்லங்களிலே வாழும் மயிலனைய இளங்கன்னியரைத் தன் காதன்மொழிகளாலே வலைப்படுத்தும் வேட்டைக்காரனாக விளங்கியவன்!

சொற்பொருள்: 2. தில்லை அன்ன - தில்லந்தளிர் போன்ற; நீர்ப்பசையற்றது இவ்விலை, 3. தாளி - மரவகையென்றும் கொடிவகையென்றும் கூறுவர். வேடவன் வலைவிரித்து மான் பிடிப்பதுபோலச் சொல்லால் வலைவீசிப் பெண்களை அகப்படுத்துதலின் சொல்வலை வேட்டுவன்’ என்றார்.

253. கூறு நின் உரையே! பாடியவர்: குளம்பாதாயனார் திணை: பொதுவியல். துறை: முதுபாலை - - -

(கடத்திடைக் கணவனை இழந்தாளின் துயர்நிலை கூறுவது முதுபாலை ஆகும். வளையில் வறுங்கை யோச்சிக் கிளையும்