பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

265


வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர் * கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த உரைய னாகி,

உரிகளை அரவமானத் தானே 20

அரிதுசெல் உலகில் சென்றனன்; உடம்பே, கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக், கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே: - உயர்.இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, - 25 மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி, இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப் படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே!

இடைச் சுரமெல்லாம் கடந்து, பசியோடு 'நம் தலைவனைக் காணமாட்டோமா என எதிர்வருவாரைக் கேட்டுக் கேட்டு வந்து கொண்டிருக்கின்ற பாணனே கேள். நம் செல்வத்தின் நிலையினை! அவன் நினக்குவிட்ட நிலத்தை உழுது விளைவித்து உண்பதும், அன்றி இரவலனாகவே திரிவதும் நின் கையிலேயே உள்ளது. பகைவர் நம் ஊர் ஆநிரை கவர, அதனைத் தான் ஒருவனேயாக மீட்டுக் கொணர்ந்தானே, அவ் வீரனின் உயிரோ போய்விட்டது. அவனுட்லோ, சிற்றாற்றின் கரையிலே, பகைவரது அம்புகளால் துளைபட்டுக் குறியிலக்கம் போல அங்கேயே வீழ்ந்தது. அவன் பெயர், மயிற்பீலி சூட்டிப் பிறர் இடங்கொளாத சிறு வழியிலே, புடைவையால் செய்த பந்தலின் கீழ் நடப்பட்டிருக்கும் நடுகல்லிலே பொறிக்கப்பட்டு விளங்குவதும், அதோ காணாய்!

261. கழிகலம் மகடூஉப் போல!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். திணை: கரந்தை. துறை: கையறு நிலை.

(கரந்தை மறவன் பட்டு வீழ்ந்து நடுகல்லாகியது கண்டு இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ள செய்யுள்)

அந்தோ! எந்தை அடையாப் பேரில்; வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம், வெற்றுயாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே! 5