பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

267


பகைவர் தூசிப்படையை முறியடித்து முன்னேறும் தன் படைக்குப்பின்னே, அவர் நிரையினைக் கவர்ந்து வருகின்றான் என் தலைவன். நிரைகொண்டு வருதலால் அவனினும் அவன் படைமறவர் மிகவும் களைத்திருக்கின்றனர். அவர் களைப்பினைப் போக்க மதுவைப் பிழியுங்கள்; ஆட்டுக் கடாக்களை வெட்டுங்கள்; தழைவேய்ந்த புன்காற் பந்தர்க்கீழ் அவர் இருந்து உண்டு மகிழ, நீரோடு வந்து கிடக்கும் இளமணலை நிறையப் பரப்புங்கள்.

263. களிற்றடி போன்ற பறை!

பாடியவர்.திணை: கரந்தை. துறை: கையறுநிலை.

(கல்லாகி நின்ற கரந்தை மறவனின் மறைவை நினைந்து வருந்திக் கூறிய செய்யுள் இது. 'கண்டோர் கையற்றுக் கூறிய தற்கும், நடப்பட்ட கல்லைத் தெய்வமாக்கி வாழ்த்தியதற்கும் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ. 5)

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண் இரும்பறை இரவல! சேறி ஆயின், தொழாதனை கழிதல் ஒம்புமதி; வழாது, வண்டுமேம்படுஉம், இவ்வறநிலை யாறே, பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர் தந்து, 5

கல்லா இளையர் நீங்க நீங்கான், வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே. களிற்றடி போலத் தோன்றும் ஒருகண் பறையோடு வரும் இரவலனே பகைவர் கவர்ந்த நிரையை மீட்டு வருகையில், வீரர் பலரும் பகைவர்க்கஞ்சி ஒடத், தான் ஒருவனே நின்று மீட்டுக் காத்தனன். கரையுடைக்கும் வெள்ளத்தினைத் தடுத்துக் காக்கும் அரண் என விளங்கினன்.அம்புகள் விரைந்து சூழ அதனிலே மூழ்கி அவன் வீழ்ந்தனன். அக் கொடிய வழியிலே நிற்கும் அவ் வீரனது நடுகல்லைப் பார்! அவ் வழியாகப் போகின்றாயாயின், அதனைத் தொழாமல் போகாதிருப்பாயாக! -

264. இன்றும் வருங்கொல்! பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார். திணை: கரந்தை. துறை: கையறுநிலை.

('தலைவன் பட்டனன்: இனிப் பாணரது கடும்பு வருமோ, வாராது ஒழியுமோ? எனக் கூறி வருந்தியது இது)