பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

271


(கண்டார், தாயிடத்துச் சென்று சொல்லி வருந்தியதாக அமைந்த செய்யுள் இதுவாகும். வாள்மிசைக் கிடந்த ஆண்மையோன் ஆகிய அவள் மகனைப் பற்றி, அவன் மறைவைக் குறித்து இரங்கிக் கூறுகின்றனர்) -

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் இரங்கு முரசின், இனம்சால் யானை, நிலந்தவ உருட்டிய நேமி யோரும்

சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே - & நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் 5 சிறுவர் தாயே! பேரிற் பெண்டே! நோகோ யானே, நோக்குமதி நீயே, மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை இன்னிசை கேட்ட துன்னரும் மறவர் வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார், 10

பேரமர் உழந்த வெருவரு பறந்தலை. விழுநவி பாய்ந்த மரத்தின், வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே. தலை நரைத்தவளாகத் தோன்றுகின்ற, இளையோரைப் பெற்ற முதுதாயே! பெருங்குடிப் பெண்டே! யானும் வருந்துகின்றேன். ஆயின், நீயே பாராய்: வெற்றி வேட்கையினரான மறவர் போர்க்கு அழைக்கும் உமை என்னும் பறையோசைகேட்டு, மன்றம் கொள்ளப் போர்க்கு எழுந்து, கடிதாகப் போரிட்ட களத்தினைப் பாராய்! பெருங் கோடரியால் வெட்டுண்டு வீழ்ந்த பெருமரம்போல, வாள்மேல் வீழ்ந்து கிடக்கின்றனனே நின் மகன்; ஆண்மைக்கு ஒர் இலக்கியமான மறவன்; அவன் திறத்தைக் காணாய்! தாயே! அது கண்டன்றோ, முரசும் களிறும் உடைய முடிவேந்தர் மூவரும் களத்திலே ஒருங்குகூடிப் பொருதுபட்ட அவனை நினைந்து அன்பால் வருந்தி நின்றனர்!

- சொற்பொருள்: 12 விழுநவி பாய்ந்த பெரிய கோடரியால் வெட்டப்பட்டு வீழ்ந்த 13. வாள்மிசைக் கிடந்த - வாளின்மேல் வீழ்ந்து கிடந்த ஆண்மையோன் திறத்து ஆண்மையை உடைய மறவனாகிய நின் மகன் திறத்தில்.

271. மைந்தன் மலைந்த மாறே! பாடியவர்: வெறிபாடிய காமக்கண்ணியார். திணை: நொச்சி. துறை: ச்ெருவிடை வீழ்தல்.